ஜேஇஇ முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி 23 முதல் 26 வரையில் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது அதற்கான தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட தேசிய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். ஜேஇஇ மெயின், ஜேஇஇ அட்வான்ஸ்டு (JEE Advanced) என இரண்டு கட்டங்களாக இத்தேர்வுகள் நடைபெறும்.
அதன்படி நடப்பு கல்வி ஆண்டிற்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி 23 முதல் 26-ஆம் தேதி வரையில் நடைபெற்று முடிந்தது. இதில், நாடு முழுவதும் இருந்து லட்சக் கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து, ஜேஇஇ முதன்மை தேர்விற்கான உத்தேச விடைகளை தேசிய தேர்வு முகமை சமீபத்தில் வெளியிட்டு, உத்தேச விடைகள் தொடர்பாக முறையீடு செய்வதற்கான கால அவகாசமும் விண்ணப்பதாரர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தற்போது ஜேஇஇ முதன்மைத் தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது மதிப்பெண் பட்டியலை jeemain.nta.nic.in அல்லது www.nta.ac.in எனும் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
NTA JEE Main result 2021 :
மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்!
nta.ac.in அல்லது jeemain.nta.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் செல்லவும்.
முகப்புப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள "result/scorecard" என்னும் பட்டனை கிளிக் செய்யவும்.
அங்கே, விண்ணப்பதாரரின் ஜேஇஇ முதன்மை தேர்விற்கான பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிடவும்.
இப்போது, தேர்வு மதிப்பெண் விவரம் திரையில் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment