Wednesday, November 3, 2021

2021-22ஆம் கல்வியாண்டிற்கான +1 மற்றும் +2 மாணவர்களுக்கு அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள் வழங்குதல் தொடர்பான அறிவுரைகள் மற்றும் நெறிமுறைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!!!

2021 - 2022 கல்வியாண்டில் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை கணக்கிட்டு வழங்கும் முறை பற்றிய அறிவுரைகள் மற்றும் நெறிமுறைகள் இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகின்றது. அதனை , முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் , பள்ளித் தலைமையாசிரியர் , பள்ளியில் உள்ள அனைத்து மேல்நிலைப் பாட ஆசிரியர்களுக்கும் அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள் வழங்குதல் தொடர்பான அறிவுரைகள் மற்றும் நெறிமுறைகளின் நகலினை வழங்கி , ஆசிரியர்களின் கையொப்பத்தினை பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர்கள் அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் வழங்குவதற்கான நெறிமுறைகளைப் பற்றி பள்ளியில் +1 மற்றும் +2 பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் . 2 . மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள் வழங்கும் முறை , நெறிமுறைகளில் குறிப்பிட்டவாறு சரியாக பின்பற்றப்படுவதை , சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் / உதவி இயக்குநர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.


No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News