Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் துறை வாரியாக பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தற்போது அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலிப்பணியிடங்களில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவிடப் பட்டுள்ளது.
இது வரை 2,774 காலிப்பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவர்கள் தற்காலிக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்ப பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவ்வாறு நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ 10000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களை விரைவில் நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த அறிவிப்பு தமிழகத்தில் உள்ள முதுகலைப் பட்டதாரிகளை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
No comments:
Post a Comment