Thursday, November 18, 2021

தமிழகத்தில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பள்ளிகள் அனைத்து வகுப்புகளுக்கும் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. அதனை தொடர்ந்து இனி வரும் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்துவதில் தளர்வுகள் அளிக்கப்படுமா என்பது குறித்து பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கல்வி அமைச்சர்:

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. முதலில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த நவ.1ம் தேதி முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது 1 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல், தனிமனித இடைவெளி உள்ளிட்டவைகள் முறையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மேலும் தொற்று மீண்டும் பரவாத வகையில் மாணவர்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனால் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி முடிக்க போதிய நேரம் கிடைக்கவில்லை என்று ஆசிரியர்கள் அரசை வலியுறுத்தி வருகின்றன. அதனால் சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் இப்போது தான் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

படங்களை நடத்துவதற்கு போதிய காலம் இல்லாததால் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்த வேண்டிய கட்டாயம் இருந்து வருகிறது. அடுத்த ஆண்டு வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்படுவதன் மூலம் இந்த சனிக்கிழமை வகுப்புகள் படிப்படியாக குறைக்கப்படும் என்று கூறியுள்ளார். அதனை தொடர்ந்து ஆசிரியர்களின் பணியிட மாறுதலுக்காக விதிமுறைகள் வரும் வாரத்தில் முதலமைச்சருடன் ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News