Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, December 20, 2021

ஜனவரி 1 முதல் அமல்.. இனி ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு புது தடை.. ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு..!!!!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
ஏடிஎம் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்தி அடிக்கடி ஷாப்பிங் செய்பவராக இருந்தால், இனி ஒவ்வொரு முறையும் முழு விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.

ஏனென்றால் வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை வணிக நிறுவனங்கள் சேமித்து வைக்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இந்த தடை ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

வழக்கமாக ஷாப்பிங் செய்பவர்கள் டெபிட் கார்டு பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் போது அவர்களின் கார்டு விவரங்கள் அனைத்தும் ஏற்கனவே சேமிக்கப்பட்டிருக்கும். 

ஏனென்றால் மூன்று இலக்க CVV எண் மட்டும் வைத்து கட்டணத்தை செலுத்தி விடலாம். ஆனால் வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்களை சேமித்து வைப்பதற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. 

இந்தத் தடை ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கார்டு எண் உள்ளிட்ட விவரங்களும் அழிக்கப்பட்டுவிடும். எனவே இனி நீங்கள் ஷாப்பிங் செய்யும்போது கட்டணம் செலுத்த ஒவ்வொரு முறையும் 18 இலக்க கார்டு எண் முழுமையாக பதிவு செய்ய வேண்டும்.

அதனால் அனைவரும் தங்கள் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு எண்களை மனப்பாடம் செய்து வைக்க வேண்டும். 

இந்த புதிய நடைமுறை ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஆன்லைன் மோசடிகளை தடுக்கும் விதத்தில் கார்டு விவரங்களை சேமித்து வைக்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News