Wednesday, December 1, 2021

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு !பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு !

பத்திரிகைச் செய்தி

அரசு பல்தொழில்நுட்ப கல்லுாரி விரிவுரையாளர்கள் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான பணித்தெரிவு சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை எண் .14 / 2019 , நாள் 27.11.2019 ன்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் Computer Based Examination 08.12.2021 முதல் 12 : 12.2021 வரை காலை / மாலை இருவேளைகள் தேர்வு நடத்த திட்டமிட்டு , தேர்வுக்கான தேதி மற்றும் காலஅட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 09.11.2021 அன்று பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்பட்டது இணையதளத்தில் தேர்வர்களுக்கு பின்வரும் முன்னுரிமையின்படி தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு , முதல் அனுமதி சீட்டு ( Admit Card ) இன்று 01.12.2021 மாலை முதல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும்.

மாற்றுத் திறனாளிகள் , கர்ப்பிணிப் பெண்கள் உரிய ஆதாரங்களுடன் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரிக்கு தேர்வு மையம் மாறுதல் சார்ந்து தங்கள் கோரிக்கைகளை அனுப்பலாம் . விண்ணப்பதாரர்கள் தங்கள் கோரிக்கைகளை அனுப்ப வேண்டிய இணையதள விவரம் : -

trblse@onlineregistrationform.org , இதுகுறித்து 03.12.2021 வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.


No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News