Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, December 17, 2021

பள்ளிகளை ஆய்வு செய்ய அறிவியல் தொழில்நுட்ப உதவியோடு புதிய நடைமுறை!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
15-12-2021 அன்று நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஒன்றியம் தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ( இந்து ) இணை இயக்குனர் திருமதி. முனைவர் S. சுகன்யா அவர்கள் வருகைதந்து கீழ்க்கண்ட வகையில் பார்வையிட்டார்கள்...

1.மாணவர் பதிவு வருகை EMIS இல் ஏற்றப்பட்ட விவரம் .

2. ஆசிரிய பதிவு வருகை EMIS இல் ஏற்றப்பட்ட விவரம் .

3. நூலகம் - புத்தக எண்ணிக்கை - மாணவர்கள் படித்த பதிவு விவரம் - நூலக பொறுப்பாசிரியர் பணிகள் ஆய்வு .

4. தலைமையாசிரியர் கூட்டத்தில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் , மாவட்ட கல்வி அலுவலர் முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோரால் வழங்கப்பட்ட அறிவுரைகள் பதிவேட்டில் பதியப்பட்டு ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியரால் தெரிவிக்கப்பட்டதா என ஆய்வு .

5. பள்ளி மேலாண்மைக்குழு வரவு செலவு - கூட்ட பதிவேடு - தீர்மானங்கள் ஆய்வு.

6. பெற்றோர் ஆசிரியர் கழக கூட்ட பதிவேடு ஆய்வு.

7 . ஆசிரியர் பாடக்குறிப்பு ஆய்வு.

8. பள்ளி தூய்மை ஆய்வு.

9. இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் , தேவையான வகுப்பறைகள் பற்றிய விவரம்.

10. கழிவறை இயலாக் குழந்தைகளுக்கான கழிவறை ஆய்வு.

வகுப்பறையில் - முதல் வகுப்பு

1 .தமிழ் எழுத்துக்கள் கேட்கப்பட்டது .

2. ஆங்கில எழுத்துகள் கேட்கப்பட்டது .

3. ஆங்கில மாதங்கள் கேட்கப்பட்டது .

4. எண்கள் கேட்கப்பட்டது .

வகுப்பறையில் – இரண்டாம் வகுப்பு

1. தமிழ் , ஆங்கிலச் சொற்கள் வாசிக்கக் கேட்கப்பட்டது .


வகுப்பறையில் - மூன்றாம் வகுப்பு

1. பாடம் நடத்தும்போது TLM பயன்படுத்துதல் ஆய்வு .

2 . ஆயத்த செயல்பாடுகள் ஆய்வு .

3. பாடக்குறிப்பு Steps படி பாடம் நடத்தப்படுகிறதா என ஆய்வு .

4. Achivement Chart உள்ளதா என ஆய்வு .

5. Learning Outcomes - ஆய்வு .

6.Dictation - போடப்பட்டது .

7. வாய்பாடு கேட்கப்பட்டது.

வகுப்பறையில் - நான்காம் வகுப்பு

1 . உயிர்மெய் எழுத்து அறிந்த விவரம் கேட்கப்பட்டது.

2. இந்திய பிரதமர் , தமிழக முதல்வர் , கல்வியமைச்சர் பெயர் கேட்கப்பட்டது

3. Dictation - போடப்பட்டது

4. வாக்கியம் வாசிக்க , எழுதக் கேட்கப்பட்டது

ஒவ்வொரு வகுப்பிலும் 15 முதல் 20 நிமிடங்கள் ஆசிரியரால் பாடம் நடத்துவது கவனிக்கப்பட்டு app இல் ஏற்றப்பட்டது.

Higher official -ஆய்வுக்காக உள்ள app இல் வரும் கேள்விகளுக்கு Yes or No முறையில் ஆய்வு செய்யப்பட்டது.

இறுதியில் சிறப்பாக இருந்த நடைமுறைகளுக்கு பாராட்டும் , குறைபாடுகளுக்கு தக்க அறிவுரையும் வழங்கப்பட்டது.

மொத்தத்தில் அறிவியல் தொழில்நுட்ப உதவியோடு மாணவர்களின் திறன் அடைவை ஆழமாக பரிசோதிக்கும் புதிய நடைமுறை உத்தி தொடங்கியுள்ளது என்றே சொல்ல வேண்டும் !



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News