தமிழகத்தில் கொரொனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது உருமாறிய வைரசான ஒமிக்ரான் பரவி வருகிறது .
இதனை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், தடுப்பு முறைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செப்டம்பர் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஒமைக்ரான் அசுர வேகத்தில் பரவி வருகிறது.இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை எல்லை பகுதிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடுகளும், கண்காணிப்புக்களும் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டும் என தமிழக அரசுக்கு பெற்றோர்கள் மற்றும் மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
No comments:
Post a Comment