Wednesday, December 22, 2021

பணியிட மாறுதல் கட்டாயம் - தொடக்கக்கல்வித் துறை அதிரடி

பணியிட மாறுதல் கட்டாயம் - தொடக்கக்கல்வித் துறை அதிரடி பள்ளிக் கல்வித்துறையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிந்தவர்களுக்கு கட்... பணியிட மாறுதல் கட்டாயம் - தொடக்கக்கல்வித் துறை அதிரடி

பள்ளிக் கல்வித்துறையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிந்தவர்களுக்கு கட்டாயம் இடமாறுதல் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பான சுற்றறிக்கையில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் பணியாற்றி வருவதால் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டு வருவதாகவும் அதனை தடுக்கும் வகையில் கலந்தாய்வில் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கட்டாயமாக பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் இரண்டாண்டுகள் பணிமுடிக்காதவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வரும் 28 ஆம் தேதி காலையில் மாவட்டத்திற்குள்ளும் மாலையில் மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கும் கலந்தாய்வு நடைபெறும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News