Tuesday, December 14, 2021

இல்லம் தேடிக் கல்வி அனைத்து மாவட்டங்களிலும் நடத்துவதற்கான தன்னார்வலர் பயிற்சி குறித்த அறிவிப்பு வெளியீடு.

கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை ஈடுசெய்வதற்காகத் தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி 1 முதல் 1 # மணிநேரம் ( மாலை 5.00 மணிமுதல் 7.00 மணிக்குள் ) கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையிலும் இடைநிற்றலை முற்றிலும் களைவதற்கும் ஏற்றவகையில் செயல்படுத்தப்பட உள்ள " இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ள தன்னார்வலர்களுக்கு இல்லம் தேடிக் கல்வியின் முக்கியத்துவம் , தன்னார்வலர்கள் பங்களிப்பின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் , தன்னார்வலர்களை ஊக்கப்படுத்துதல் , குழந்தைகளை கையாள வேண்டிய விதம் மற்றும் கற்றல் கற்பித்தல் முறைகள் குறித்து இரு நாட்கள் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது . இப்பயிற்சியானது வட்டார வளமைய பயிற்சியாக 1 5 வகுப்புகளை கையாளும் தன்னார்வலர்களுக்கு ஒரு பிரிவாகவும் , 6-8 வகுப்புகளை கையாளும் தன்னார்வலர்களுக்கு மற்றொரு பிரிவாகவும் வழங்கப்படவுள்ளது . இப்பயிற்சிக்கான கருத்தாளர்களுக்கு மாநில அளவில் மற்றும் மாவட்ட அளவில் கீழ்காணுமாறு பயிற்சி நடைபெறவுள்ளது

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News