டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் குரூப் 2 மற்றும் குரூப் 4 ஆகிய இரண்டு தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடங்களில் 40 மதிப்பெண்கள் கட்டாயம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டு அதன் மூலம் பணி நியமனம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நடத்தப்படும் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது . மேலும் இந்த தேர்வில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழக அரசு மொழி பாடத்தில் 40 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வில் இடம் பெறும் 100 தமிழ் மொழி பாட வினாக்களில் 40 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே பிற வினாத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என தெரிவித்துள்ளது. குரூப்-4 தேர்வுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும், குரூப் 2 தேர்வுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த இரண்டு தேர்வுகளுக்கும் விரைவில் தேர்வுகள் நடத்தப்பட உள்ள நிலையில் தேர்வுக்கு தயாராகும் அனைவரும் தமிழ் மொழி பாடம் குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment