தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC மூலம் அரசு தேர்வு செய்து வருகிறது.
திறமையான ஊழியர்களை கண்டறிய பல்வேறு போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்காணல் போன்றவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகின்றது.
அரசு பணிகளின் அடிப்படையில் இந்த தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 போன்ற தேர்வுகள் உள்ளன. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குரூப் 2, குரூப் 4 மற்றும் குரூப் 2A தேர்வுகள் நடைபெறாத நிலையில், 2022 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் குரூப் 2 தேர்வும் மார்ச் மாதத்தில் குரூப் 4 தேர்வும் நடைபெறும் என்று அண்மையில் TNPSC தலைவரான பாலச்சந்திரன் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் 2022-ஆம் ஆண்டு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 12,263 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதில் குரூப் 2 மற்றும் குரூப் -4 பதவிகளில் மட்டும் 11,806 காலிப்பணியிடங்கள் இருக்கிறது. இதில் குரூப்-2 தேர்வு மூலமாக 5,831 இடங்களும், குரூப்-4 தேர்வு மூலமாக 5,255 இடங்களும் நிரப்பப்பட இருக்கிறது.
No comments:
Post a Comment