Saturday, January 1, 2022

ஆசிரியர்கள் கவுன்சிலிங் 31.12.2021 முதல் விண்ணப்பிக்கலாம்

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான, பொது மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மாறுதல் பெற விரும்புவோர் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களை தொடக்கப்பள்ளி, பள்ளிக்கல்வி, தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், கல்வி மேலாண்மை தகவல் முகமை இணையத்தில், இன்று முதல் ஜன.,7 வரை பதிவேற்றம் செய்யலாம்.இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட, அனைத்து வகை ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்களின், முன்னுரிமை பட்டியல், வரும் 10ம் தேதி வெளியிடப்படும்.

பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் இருந்தால், மறுநாள் அப்பணி மேற்கொள்ளப்படும். மாறுதல் விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமை பட்டியல் ஜன., 13ல் வெளியிடப்படும். வரும், 19ம் தேதி முதல் கவுன்சிலிங் துவங்கி, பிப்.,18 வரை நடக்கும் என, பள்ளிக்கல்வித்துறை ஆணையரகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News