ஓய்வூதியர்களின் வீடுகளுக்கே சென்று, மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் அளிக்கும் சேவையை அஞ்சல் துறை தொடங்கி உள்ளது.
ஓய்வூதியர்களுக்கு, பயோமெட்ரிக் அடிப்படையிலான மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் (டிஜிட்டல் லைஃப் சர்டிபிகேட்) அளிக்கும் சேவையை இந்தியாபோஸ்ட் வங்கி மூலம் அஞ்சல் துறை தொடங்கியுள்ளது.
இந்த சேவையை அஞ்சல் ஊழியர்கள், கிராமப்புற அஞ்சல் சேவகர்கள் மூலம் குறைந்த கட்டணத்தில், ஓய்வூதியர்களின் வீடு தேடிச் சென்று வழங்குகின்றனர். இதன்மூலம், கரோனா தொற்று காலத்தில், வங்கிகள், அலுவலகங்களுக்கு மூத்த குடிமக்கள் செல்லும் நிலை தவிர்க்கப்படுகிறது.
சென்னை நகர வடக்கு மண்டலத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் இந்த சேவை வழங்கப்படுகிறது. அஞ்சல் தகவல் செயலி அல்லது http://ccc.cept.gov.in/covid/request.aspx என்ற இணையதளம் மூலம், வீடு தேடி வரும்சேவைக்கான வேண்டுகோளை அனுப்பலாம். மின்னணு சான்றிதழுக்கு விண்ணப்பிக்க, http://jeevanpramaan.gov.in/ppouser/login என்ற இணையதள இணைப்பில் உரிய படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம் என்று சென்னை நகர வடக்கு மண்டலஅஞ்சலகங்களின் முதுநிலை மேற்பார்வையாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment