Thursday, January 6, 2022

TN EMIS SCHOOL APP - New Release - Download Now

TN EMIS - பள்ளி தகவல் அடங்கிய ஆசிரியர் , மாணவர் வருகை பதிவு செய்ய புதிய செயலி ( APP ) வெளியீடு.


அனைவருக்கும் வணக்கம்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வருகையை பதிவு செய்வதற்கான புதிதாக Attendance App செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 10.01.2022 திங்கள் முதல் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் மேலே குறிப்பிட்டுள்ள வருகை பதிவு செய்யும் செயலியை play store-ல் பதிவிறக்கம் செய்து அதில் வருகையை பதிவேற்றம் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இச்செயலில் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் local body-ல் scavenger and sweepers ஆகியோரது வருகையை பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த appல் முதலில் பள்ளியில்

1. Full working day

2. Fully not working day

3. Partially working day

என பள்ளி செயல்படும் நாள் அன்றைய தேதியில் சரியாக குறிப்பிட்டால் மட்டுமே மாணவர்களுடைய வருகையை பதிவு செய்ய இயலும். உதாரணமாக இன்று முழு வேலை நாள் பகுதி வேலைநாள் முழு வேலை நாள் இல்லை என குறிப்பிட்டால் மட்டுமே அதற்கேற்றவாறு மாணவர்களுடைய வருகை பதிவேற்றம் செய்ய இயலும்.

மேலும் இது சார்ந்து ஏதேனும் சந்தேகம் ஏற்படுமாயின் அதை மாநில திட்ட இயக்கத்தில் கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளலாம்.

குறிப்பு:

அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் play store-ல் ஓபன் செய்து right cornerல் உள்ள மூன்று புள்ளியை touch செய்து அதில் மூன்றாவதாக உள்ள auto update என்பதை tick செய்து கொள்ளவும்.


TN EMIS புதிய APP ன் விளக்க வீடியோ பார்த்து அதன்பின் பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பை எவ்வாறு பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது குறித்த செயல் விளக்க வீடியோ இணைப்பு.

TN EMIS School App | New Release | Full explanation Video - View here

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News