தமிழகத்திலுள்ள அரசுத்துறைகளில் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2 வருடங்களாக காரணமாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. அதன் பின்னர் தொற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில், சில தேர்வுகள் நடத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் அரசு துறையில் உள்ள கெமிஸ்ட் பணியிடத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
இந்த பணிக்கு வேதியியல் பிரிவில் எம்எஸ்சி அல்லது கெமிக்கல் டெக்னாலஜி அல்லது இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி அல்லது வேதியியலாளர்கள் நிறுவனத்தின் அசோசியேட்ஷிப் டிப்ளமோ ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் தூய அல்லது பயன்பாட்டு வேதியியல் அல்லது பகுப்பாய்வு வேதியியல் உள்ளிட்ட பாடத்தில் அடிப்படையாகக் கொண்ட ஆராய்ச்சிப் பணிகளில் பணியாற்றிய பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் எழுதப் படிக்க கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
இந்தப் பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்தப் பணியில் நியமிக்கப்படுபவர்களுக்கு மாத சம்பளமாக 37,700 ரூபாய் முதல் 1,19,500 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இதனை https://www.tnpsc.gov.in./என்ற இணையதளம் மூலமாக ஆன்லைன் முறையில் ஜனவரி 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் இது பற்றிய கூடுதல் விபரங்களுக்கு https:/www.tnpsc.gov.in/Document/english/21-2021-CHEMIST-ENGLISHஎன்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும். இதற்கான தேர்வு மார்ச் 19-ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment