Saturday, February 5, 2022

தேர்வு பணியா; தேர்தல் பணியா குழப்பத்தில் ஆசிரியர்கள்!

கல்வித்துறை திருப்புதல் தேர்வும் உள்ளாட்சி தேர்தல் பயிற்சி வகுப்பும் ஒரே நாளில் நடப்பதாக இருந்த நிலையில் பயிற்சி வகுப்பு பிப்.10க்கு மாற்றியும் குழப்பம் தீரவில்லை என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப். 9 ல் நடக்கும் முதல் திருப்புதல் தேர்வை ஒரு பொதுத் தேர்வு போல் நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சமூக இடைவெளி பின்பற்றி ஒரு தேர்வு அறையில் 20 மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்பதால் கூடுதல் வகுப்பறைகளுக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பிலும் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது.

இதுகுறித்து சர்ச்சை எழுந்த நிலையில் பயிற்சி வகுப்பை மாநில தேர்தல் கமிஷன் பிப்.10க்கு மாற்றி அறிவித்தது. ஆசிரியர்கள் கூறுகையில் “பயிற்சி வகுப்பை தேர்வு இல்லாத நாளான பிப்.8 அல்லது பிப். 12ல் நடத்தினால் தான் ஆசிரியர்கள் பங்கேற்க முடியும். இல்லாவிட்டால் தேர்வு தேதியை கல்வித்துறை மாற்றி குழப்பத்தை தீர்க்க வேண்டும்” என்றனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News