Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, February 11, 2022

PG TRB தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு HALL TICKET- வுடன் எதைக் கொண்டு வரவேண்டும் எந்தெந்த பொருட்களுக்கு அனுமதி கிடையாது-முழு விவரங்கள்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

PG TRB-தேர்வு காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் நடத்தப்படவுள்ளது. தேர்வுகள் காலை 09.00 மணி பிற்பகல் 02.00 மணி என வேளைகளில் நடை பறவுள்ளதால் காலை வேளையில் தேர்வெழுதும் தேர்வர்கள் 07.30 மணிக்குள்ளாகவும், பிற்பகல் தேர்வு எழுதும் தேர்வர்கள் 12.30 மணிக்குள்ளாகவும் தேர்வு மையத்தில் ஆஜராகத் தெரிவிக்கப்படுகிறது.

தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுடன். Hard copy of photo மற்றும் கீழ்க்காணும் அடையாள அட்டைகளுள் ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டை இணையும் கொண்டுவர வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

1 Aadhar Card

2. Voter ID

3. Driving License 4 PAN card

5 Passport


12.02.2022 முதல் 20.02.2022 வரை (19.02.2022 தவிர்த்து) தேர்வு நடைபெறும் தேர்வுக் கூடத்திற்குள் தேர்வர்கள் விலையுயர்ந்த ஆபரணங்கள் அணிந்துவரக் கூடாது.

மேலும் தேர்வுக் கூடத்திற்குள் Moblle Phone, Micro Phone, Calculator, log Tables. Pager, Digital Diary. Books போன்ற பொருட்களை பயன்படுத்த அனுமதி கிடையாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி முதற்கட்டமாக நடைபெறும் 9 தேர்வு மையங்களிலும் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய பாதுகாவலர் வசதி ஏற்பாடு செய்யவும், தடையில்லா மின்சாரம் வழங்கிடவும், போதுமான போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்து தரவும் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்படுள்ளது.

மேலும், தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் மற்றும் எவ்வித முறைகேடு ஏற்படா வண்ணம் மேற்படி தேர்வுகளை கண்காணிக்கும் பொருட்டு, வருவாய்த்துறை அதிகாரிகள் நேரடியாக பார்வையிட அனைத்து முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FULL DETAILS CLICK HERE

PG TRB HALL TICKET DOWNLOAD-CLICK HERE...

1 comment:

Popular Feed

Recent Story

Featured News