Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, March 25, 2022

உயர் கணினி ஆய்வகத்தில் நடைபெற்ற வினாடி வினாவில் சிறப்பாக செயல்பட்ட 1480 மாணவர்களுக்கு ரூ2000 பரிசு அறிவிப்பு - SPD செயல்முறைகள்

9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உயர் கணினி ஆய்வகத்தில் நடைபெற்ற வினாடி வினாவில் சிறப்பாக செயல்பட்ட 1480 மாணவர்களுக்கு ரூ2000 பரிசு அறிவிப்பு SPD செயல்முறைகள்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , 2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான திட்ட ஏற்பளிப்புக் குழு ஒப்புதல் அறிக்கையில் ( PAB Minutes ) உள்ளபடி செய்துணர் கற்றல் திட்டத்தின் கீழ் , மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி ( Quiz Competition ) நடத்துவதற்காக , இடைநிலையில் , 6177 அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு , பள்ளி ஒன்றுக்கு ரூ . 500 / - வீதம் 30.885 இலட்சம் நிதி அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் , அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு , அனைத்து பாடங்களிலும் அவர்களது கற்றல் அடைவை சோதிக்கும் வகையில் , இணையதள வழியாக ( Hi - Tech Lab வாயிலாக ) ஒவ்வொரு வினாவிற்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் இருந்து சரியான பதிலைத் தெரிவு செய்யும் விதமாக 30 வினாக்கள் கொண்ட Basic Quiz நடத்தப்பட்டது

வினாக்கள் அனைத்தும் SCERT- ஆல் தயாரிக்கப்பட்டு EMIS வாயிலாக போட்டிகள் நடத்தப்பட்டது . மேற்காண் Basic Quiz செயல்பாட்டில் கலந்துகொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் , ஒவ்வொரு வகுப்பிலும் சிறந்த மதிப்பெண் பெற்ற 1,480 மாணவர்களின் விவரம் ( ஒரு மாவட்டத்திற்கு 10 மாணவர்கள் வீதம் 37 மாவட்டங்களுக்கு ) EMIS வாயிலாக பெறப்பட்டுள்ளது . இந்நிலையில் , தெரிவு செய்யப்பட்டுள்ள 1,480 மாணவர்களையும் ஊக்கப்படுத்தவும் , மேலும் கற்றலின்மீது ஆர்வத்தைத் தூண்டும் விதமாகவும் , அவர்களுக்கு பரிசளிக்கும் வகையில் மாணவர் ஒருவருக்கு ரூ .2000 / - வீதம் மொத்தம் ரூ .29,60,000 / - நிதி இணைப்பில் உள்ளவாறு மாவட்டங்களுக்கு விடுவிக்கப்படுகிறது.













No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News