தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த மாதம் பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை பற்றிய தகவல்களும் இடம் பெற்றுள்ளது.
கோடை விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கத்தால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. அத்துடன் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் வழக்கம் போல நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அத்துடன் கடந்த ஆண்டு பொதுத்தேர்வு கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டதால் இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. அதன்படி 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது. மேலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ம் தேதி தொடங்கி மே 30ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என்று இதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் 28ம் தேதி முதல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 6 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை இறுதிதேர்வு நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13ம் தேதி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என்றும் அதன்பிறகு கோடை விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13ம் தேதி முதல் ஜூன் 12ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பால் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.
No comments:
Post a Comment