Join THAMIZHKADAL WhatsApp Groups
மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவர்களுடன் அவர்களது குழந்தைகளின் கல்விக்கும் சலுகைகளை அறிவித்து வருகின்றன.
இதுவரை 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு குழந்தைகளுக்கான கல்வித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த உதவித்தொகையை பெற விரும்புபவர்கள் மார்ச் 31ம் தேதி வரை இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் . கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வு தற்போது வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.2250 வரை வழங்கப்படுகிறது. இரு குழந்தைகள் இருப்பவர்களுக்கு மாதம் ரூ4500 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட்டன. அதனால் இந்த உதவித்தொகையை பெற உரிமை கோர முடியவில்லை.
கடந்த 2 ஆண்டுகளாக கல்வித்தொகைக்கு உரிமை கோராத மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 31ம் தேதிக்குள் இந்த உரிமை பெற விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இதனைப் பெற சான்றிதழ் மற்றும் கோரிக்கை ஆவணங்கள், ரிப்போர்ட் கார்டு, சுய சான்றளிக்கப்பட்ட நகல் மற்றும் கட்டண ரசீது போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.
No comments:
Post a Comment