Join THAMIZHKADAL WhatsApp Groups
கொய்யா இலையில் புரதம், வைட்டமின்கள் பி 6, கோலைன், வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்ற சத்துகளும், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், ஆன்டி-பாக்டீரியல் போன்றவை இருக்கிறது.
கொய்யா இலை துவர்ப்பு சுவை உடையது.
கொய்யாவில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது இலை பட்டை என அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டுள்ளன. "கொய்யா இலையின் பயன்கள்" பற்றி இங்கு காண்போம்.
கொய்யா இலையின் பயன்கள்
1.ஜப்பானில் உள்ள யாகுல்ட் மத்திய நிறுவனம் நடத்திய ஆய்வில் கொய்யா இலை தேநீர் அல்ஃபா (Glucosidease) கொதி செயற்பாட்டைக் குறைத்து இரத்த சர்க்கரை அளவை குறைக்கின்றது என்பதனைக் கண்டறிந்துள்ளனர். கொய்யா இலைகளை தேயிலையைப் போல் வெந்நீரில் கலந்து அல்லது கொதிக்க வைத்து பருகினால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும்.
2. செரிமான உறுப்புகள் பலம்பெறும் - உணவு உண்ட பின்பு கொய்யா இலையை உண்டால் வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல், மண்ணீரல் போன்றன பலப்படும்.
3. கொய்யாக் கொழுந்து இலையை மென்று விழுங்கினால் செரியாமை, வயிற்று மந்தம், குடல் வாயு தீரும்.
4. மாந்தம், வயிற்றுப் பொருமல், வறட்சி, தாகம் அடங்க ஒருபிடி கொய்யா இலையை அரிந்து ஒரு மிளகாயுடன் வதக்கி ஒரு லீட்டர் நீரில் இட்டு கால் லீட்டராக காய்ச்சி அரை மணிக்கு ஒரு முறை வீதம் குடித்து வர வேண்டும்.
5. பல் சம்பந்தமான கோளாறுகளை கொய்யா இலை குணமாக்குகின்றது - இலையை வாயில் போட்டு மென்று அதைக் கொண்டு பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும்.
6. காயம், புண் உள்ள இடங்களில் கொய்யா இலையை அரைத்து அதன் மேல் வைத்தால் விரைவில் குணமடையும்.
7. நுரையீரல் புற்று நோய்களில் இருந்து குணமாக்குகின்றது. கொய்யாவில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கட்டி வளர்ச்சியை தடுக்கிறது.
8. கொய்யா இலைத் தேநீர் குடித்து வந்தால் 12 வாரங்களில் உடல் எடை குறையும்.
9. கொய்யா இலை முடியை உறுதிப்படுத்த உதவுகின்றது - கொய்யா இலையைத் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பின் தலையில் தேய்த்து நன்கு மசாஜ் செய்து வந்தால் முடி உதிர்வது நின்று முடி பலம் பெறும்.
10. முகப்பருவைப் போக்கும் - கொய்யா இலையில் உள்ள வைட்டமின்-C முகப்பரு உருவாகுவதை தடுக்க வல்லது.
No comments:
Post a Comment