Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, March 23, 2022

முடி உதிர்வை தடுக்கும் சித்தர்களின் குறிப்புகள்

அன்றாட வாழ்வில் நம் சந்திக்கும் பல பிரச்சனைகளோடு ஒன்றாக மாறி வருகிறது "நம் அழகு சார்ந்த பிரச்சனைகளும்". அதனால் நம்மில் பலர், அவர்கள் அழகைப் பராமரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

குறிப்பாக, முடி உதிர்வைத் தடுத்தல், முகப் பரு அகற்றுதல்,உடல் எடை குறைதல், போன்ற சரும பிரச்சனைகளில் இருந்து, எப்படி விடுபடுவது என்று யோசனை கொள்கிறார்கள்.

இதில் முடி உதிர்வைக் கண்டு நம்மில் பலர் அஞ்சி இருக்கிறோம். அது மட்டும் இல்லாமல் இப்படிக் கொத்து கொத்தாக முடி உதிர்வதை எப்படித் தடுப்பது என்று எண்ணி வருந்தவும் செய்து இருக்கிறோம். இதன் விளைவாக இதிலிருந்து விடுபடுவதற்கு, யூடியூப் மற்றும் இணையதளங்களில் முடி உதிர்வைத் தடுப்பதற்கான பல ஆலோசனை வீடியோகளை பார்த்தும்.

பல மருத்துவர்களை அணுகி, அவர்களின் அறிவுறுத்தலால் விலையுயர்ந்த ஷாம்பூ, கண்டிஷ்னர் மற்றும் சீரம் போன்ற பல்வேறு பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருவதும் உண்டு.

அளவுக்கதிகமாக முடி உதிராமல் இருக்கும் வரை முடி உதிர்வு சாதாரணமா ஒன்றுதான். நாம் தலை சீவும் பொழுது சீப்பில் மட்டும் வரும் நான்கு ஐந்து முடி நாளடைவில் இயல்பாகவே கீழே விழக்கூடியது.

அதுவே தலையைத் துவட்டும் போது டவலிலும், கழுத்து, ஆடையிலும் கொஞ்சம் அதிகமாக 10க்கும் மேற்பட்ட முடிகள் உதிர தொடங்கினாள். அது நிச்சயம் சத்து குறைபாடல் உதிரக்கூடிய ஆரம்பக் கட்ட முடி உதிர்வு பிரச்சனை தான்.

இவற்றுக்கெல்லாம் ஓர் முற்றுப்புள்ளியாக, இயற்கை முறையில் எப்படித் தீர்வு காணமுடியும் என்பதைக் குறித்து சில குறிப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

அதாவது எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாமல் இயற்கை முறையில் முடி உதிவை தடுத்து, ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்காய்கறிகள் மற்றும் பழங்களின் ஜூஸ்பற்றி இப்போது பார்ப்போம்.

கொத்தமல்லி ஜூஸ்

முடி உதிர்வைத் தடுக்க நம் முன்னோர்களின் குறிப்பு படி கொத்தமல்லி இலையை வைத்தே நம்மால் இழந்த முடியை மீண்டும் பெற முடியும். சமையலில் வாசனைக்காகவும், செரிமானத்திற்காகவும் பயன்படுத்தும் கொத்தமல்லியை அரைத்து ஜூஸ் ஆக எடுத்து, முடியின் வேரில் தடவி 1 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

அதன்பின் தலைக்குக் குளிக்கலாம். இப்படி வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் முடி உதிர்வைத் தடுத்து ஆரோக்கியமான முடியைப் பெறலாம்.


கற்றாழை ஜூஸ்

நமது அழகில் மிக முக்கியமான ஒன்றாக நம் அனைவராலும் பார்க்கப்படுவது நம்முடைய முடிகள் தான். ஆனால் தூசி, மாசு மற்றும் வெயில் போன்றவற்றால் நம் முடி பாதிக்கப்பட்டு உதிரத் தொடங்குகிறது.

அதனால் கற்றாழையை ஜூஸ் ஆக அரைத்து முடியின் வேரில் தடவி நன்றாக மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்துக் கழுவவும். அதன் மூலம் முடி உதிர்வு, இளநரை, கூந்தல் வெடிப்பு போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம்.


வெங்காய ஜூஸ்

முடி வளர்ச்சிக்கு வெங்காயம் சிறந்தது என்று நம் அனைவரும் அறிந்த உண்மை. அதனால் சிறிதளவு சிறிய வெங்காயத்தை மிக்ஸி ஜாரில் தண்ணீர் ஊற்றாமல் நன்றாக அரைத்து கொள்ளவும். பின்னர் வெங்காயச் சாறை தலையில் நன்றாக தேய்த்து 1 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.


நன்றாக ஊறிய பிறகு வெங்காய வாசனை முடியில் இல்லாதவாறு ஷாம்பூவால் தலைக்கு குளிக்கவும். இப்படி வாரத்திற்கு1 முறை, என்று 2 மாதங்களுக்கு இந்த முறையை செய்து வந்தால் முடி உதிர்வை தடுத்து, அடர்த்தியான முடியை பெறலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News