Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, March 26, 2022

பத்தாம் வகுப்பு தேர்ச்சியா? SSC அறிவித்துள்ள 3600 பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்கலாம்..

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
மத்திய அரசுத்துறையில் காலியாக உள்ள பன்முக உதவியாளர், ஹவால்தார் உள்ளிட்ட 3600 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என மத்திய பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசுப்பணியில் சேர்ந்துப்பணியாற்ற வேண்டும் என்ற ஆசை பலரும் இருக்கும். ஆனால் இப்பணிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்களைத் தான் நியமனம் செய்ய வேண்டும் என்பதற்காக எஸ்.எஸ்.சி (Staff selection committee - SSC) தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பன்முக உதவியாளர், ஹவால்தார் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிரப்பப்படவுள்ள நிலையில் இதற்கான தகுதி? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.


மொத்த காலிப்பணியிடங்கள் - 3600க்கு அதிகமானது என அறிவிக்கப்பட்டது.

கல்வித்தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றிருந்தால் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

1-1-2022 அன்றின் படி 18 வயது முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வுகள் உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில்,https://ssc.nic.in/என்ற இணையதளப் பக்கத்திற்கு முதலில் செல்ல வேண்டும்.

பின்னர் அப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் சரியாக பூர்த்தி செய்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: ஏப்ரல் 30, 2022.

விண்ணப்பக் கட்டணம் :

பொதுப்பிரிவினருக்கு ரூ. 100ம் மற்றும் SC/ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு (Computer Based Examination), எழுத்து தேர்வு (Descriptive Paper) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த கணினி வழி தேர்வானது 100 மதிப்பெண்களுக்கு ஆங்கிலம் (General English), பொது அறிவு (General Awareness), திறனறிதல் (General Intelligence & Reasoning), கணிதம் (Numerical Aptitude) ஆகிய பகுதிகளில் இருந்து தலா 25 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆனால் ஹவால்தார் பணியிடங்களுக்கு மட்டும் கூடுதலாக உடற்தகுதி தேர்வு நடக்கும் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தகுதிவாய்ந்த இளைஞர்கள் உடனடியாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேலைவாய்ப்புக் குறித்த கூடுதல் விவரங்களை,https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_mts_22032022.pdfஎன்ற இணையதளப் பக்கத்தின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News