பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அனைத்து உயர் கல்வி நிறுவனங்கள் (HEIs) மற்றும் பல்கலைக்கழகங்கள் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 180 நாட்களுக்குள் அனைத்து தகுதியான மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு UGC எழுதிய கடிதத்தில், “பட்டம் வழங்கும் தேதிகள் மாணவர்கள் தகுதிபெற எதிர்பார்க்கும் தேதிகளில் இருந்து 180 நாட்களுக்குள் இருக்க வேண்டும். பட்டப் படிப்பை பெறும் மாணவர் கல்வியில் வேலை பெறுவதில் ஏற்படும் தாமதத்தை போக்க யுஜிசி இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் இந்த உத்தரவை பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் இந்த உத்தரவை மீறும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாவண- மாணவியரின் கல்வித் தரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. UGC-யின் விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்து, பரிந்துரைக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பட்டத்தை வழங்க வேண்டும் என கூறியுள்ளது.
மேலும் பட்டப்படிப்பு, மதிப்பெண் பட்டியல் மற்றும் இதர சான்றிதழ்கள் வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தால், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு விஷயங்களில் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. “ஒரு திட்டத்தை வெற்றிகரமாக முடித்த பிறகு சரியான நேரத்தில் பட்டம் பெறுவது ஒரு மாணவரின் உரிமை என்று UGC தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment