வருமான வரிச் சட்டம், 1960 இன் பிரிவு 80 EEA இன் கீழ், வீடு வாங்குபவர்கள் ரூ. 1.5 லட்சம் கூடுதல் வருமான வரிச் சலுகை வழங்கப்பட்டு வந்தது. 2021ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் வருமான வரி சட்டம் 80EEA-இன் கீழ் வீடு வாங்குவோருக்கான வரிச் சலுகை நீட்டிக்கப்பட்டது. அதன்படி, 2022 மார்ச் 31ஆம் தேதி வரையில் வீடு வாங்குவோர் தங்களது வீட்டுக் கடனில் ரூ.1.50 லட்சம் வரையில் வரிச் சலுகை பெற முடிந்தது.
இந்த சலுகையை பெற மார்ச் 31, 2022ம் தேதிக்குள், சொத்து மதிப்பு ரூ. 45 லட்சத்திற்கு மேல் இருக்க கூடாது என்றும், வீட்டின் கார்பெட் ஏரியா 60 சதுரத்திற்குள் இருக்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது. பெங்களூரு, சென்னை, டெல்லி NCR (டெல்லி, நொய்டா, கிரேட்டர் நொய்டா, காசியாபாத், குர்கான், ஃபரிதாபாத்) ஐதராபாத், கொல்கத்தா மற்றும் மும்பை (மும்பை பெருநகரப் பகுதி முழுவதும்) ஆகிய பெருநகரங்களில் 645 சதுர அடியும், மற்ற நகரங்களில் கார்பெட் ஏரியா 90 சதுர மீட்டர் அதாவது 968 சதுர அடிக்கு அதிகமாக இருக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புதிதாக வீடு வாங்குவோர் குறைவான விலையில் வீடு வாங்குவதை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு இத்திட்டத்தை அறிவித்திருந்தது. இத்திட்டத்தை மத்திய அரசு 2020 மற்றும் 2021ம் ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டின் போது மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து உத்தரவிட்டது. கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் இச்சலுகை நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கான அறிவிப்பு வெளியாகாததால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ரூ.1.5 கூடுதல் பலன்களை பெற்றது எப்படி?
வீடு வாங்குபவர்கள் பிரிவு 80EEA இன் கீழ் ரூ. 1.5 லட்சம் கூடுதல் பலனைப் இதுவரை எவ்வாறு பெற்று வந்தார்கள் என்பதை அறிந்து கொள்வோம்.
ஒருவர் புதிதாக வீடு வாங்க விரும்பும் நபர் பிரிவு 80EEA இன் கீழ் பலன்களைப் பெற விரும்பினால், ஏப்ரல் 1 2019ம் ஆண்டு முதல் மார்ச் 31ம் தேதி 2022 வரையிலான காலக்கட்டத்திற்குள் கடனுக்காக பதிவு செய்திருக்க வேண்டும். வீட்டுச் சொத்தின் முத்திரைத் தாள் மதிப்பு 45 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும். வரி செலுத்துவோர் முதல் முறையாக வீடு வாங்குபவராக இருக்க வேண்டும், மேலும் மேற்கூறிய காலக்கட்டத்தில் நிதி நிறுவனத்தில் இருந்து கடன் பெறப்படும். இந்த பிரிவின் கீழ் மீண்டும் வீடு வாங்க சலுகை பெற முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதற்கான கால அவகாசம் மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைந்ததை அடுத்து, 2022 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிதாக வீடு வாங்குபவர்கள் இனி அதிகமாக வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும்.
No comments:
Post a Comment