தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு ஆசிரியர் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் பெரும்பாலான மாணவர்கள் காலை உணவை சாப்பிடாமல் வருவதால் ஒருவிதமாக சோர்வாகவே காணப்படுவார்கள். மேலும் இது தொடர்பாக, தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, சென்னை பள்ளிகளில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களில் உள்ள குழந்தைகள் தான் படிக்கிறார்கள்.
இந்நிலையில் அவர்களின் குடும்ப சூழ்நிலை காரணமாக காலை உணவு சாப்பிடாமல் பலபேர் பள்ளிக்கு வருகின்றனர். இதனால் கல்வியில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் உடலும், உள்ளமும் ஒருசேர அமைந்தால் தான், கற்றலும் கற்பித்தலும் சிறப்பாக நடக்கும்.
ஆகவே இதனையறிந்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வலியுறுத்தியதன் மூலம் மற்றும் புதியதாக தேர்வான சென்னை மேயர், வரிவிதிப்பு மற்றும் நிதிக் குழுத் தலைவரிடமும் இத்திட்டம் பற்றி விரிவாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நிர்வாகிகள் எடுத்துக்கூறினர். இதனையடுத்து இன்று வெளியான பெருநகர சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் கூறியுள்ளதாவது, சென்னை பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும். இதன் மூலம் கற்றல் கற்பித்தல் சிறப்பாகவும் மற்றும் மாணவர் சேர்க்கையும் அதிகரிக்கும்.
எனவே தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை அறிவித்த மாண்புமிகு முதலமைச்சர், மேயர், வரிவிதிப்பு மற்றும் நிதிநிலைக் குழுத் தலைவர் அவர்களுக்கு, தம் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றன. மேலும் சென்னைப் பள்ளிகளை மேலும் தரம் உயர்த்தும் வகையில் மாதிரிப் பள்ளிகளாக மாற்றுவதற்கு பரிசீலனை செய்திடும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment