Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, April 24, 2022

சிவகரந்தை இருக்கும்போது நரைமுடியிருந்தால் கவலை எதற்கு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பொதுவாக இளநரை ஏற்படுவதற்கு மரபு சார்ந்த சில விஷயங்களும் காரணமாக இருக்கிறது. பாரம்பரியமாக, வழிவழியாக ஒரு குடும்பத்தாருக்கு இளம் வயதிலையே நரைவருகிறது என்றால் அதை எந்த மருந்துக்களாலும் தீர்க்க முடியாது.

அது இல்லாமல் நரைமுடி வந்தால் அக்குறையை நிவர்த்தி செய்ய பக்கவிளைவுகள் இல்லாத சில எளிய மருந்துகளும் உண்டு.

சிவகரந்தை என்ற ஒரு மூலிகை இருக்கிறது. இதை பூ பூப்பதற்கு முன்பு பிடுங்கி நிழலில் உலர்த்தி இடித்து சலித்து வைத்துகொள்ள வேண்டும். அத்தோடு கரிசலாங்கண்ணி இலையையும் உலர்த்தி பொடி செய்து சிவகரந்தை பொடியுடன் சமமாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

தினசரி காலை மாலை இருவேளையும் சுத்தமான பசு நெய்யில் கலந்து ஒரு மண்டல காலம் சாப்பிட்டு வந்தால் இளநரை கண்டிப்பாக மறைந்து முடி கருத்துவிடும். இந்த மருந்து சாப்பிடும்போது மது மற்றும் புகையிலை நிச்சயம் பயன்படுத்த கூடாது. அதேபோல உணவில் அதிகபடியான காரத்தையும் புளிப்பையும் குறைக்க வேண்டும்.

இந்த சிவகரந்தை, அதிக மருத்துவ குணம் கொண்ட அரியவகை மூலிகைச் செடியாகும்.. மிகுந்த வாசனை கொண்ட சிவகரந்தை, சிறுசெடி வகையைச் சார்ந்தது.

பிளவு கொண்ட இலைகளையும் ஊதா நிறப் பூக்களையும், தண்டுகளையும் கொண்டது. சிவகரந்தை என்ற மூலிகையின் ஒவ்வொரு பகுதியும் மருத்துவத் தன்மை கொண்டது.

மேலே சொன்னபடி பக்குவம் செய்து, நாற்பத்து எட்டு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர இளநரை நீங்கும்.

நரைமுடிக்கு காரணம் என்ன? வயது அதிகமாகும்போது முடி நரைப்பது சகஜம். ஆனால், சிறு வயதிலேயே பலருக்கு நரைமுடி பிரச்சனை ஏற்படுகிறது. இதற்குப் பின்னால் பல காரணங்கள் இருந்தாலும் சிலவற்றை நம்மால் தவிர்க்கவும், தடுக்கவும் முடியும்.

இளம் வயதிலேயே நரைமுடி தோன்றுவது ஏன்?

முடியின் நிறமி குறையத் தொடங்கும் போது, ​​அவற்றின் நிறம் கருப்பு நிறத்தில் இருந்து வெள்ளையாக மாறத் தொடங்குகிறது. சிறு வயதிலும், குழந்தை பருவத்திலும்முடி நரைப்பதற்குபல காரணங்கள் இருக்கலாம்.

மன அழுத்தம் அதிகமாகும் போது பல பிரச்சனைகள் ஏற்படும். அதுமட்டுமல்ல, மன அழுத்தம் முடியின் வேர்களில் இருக்கும் ஸ்டெம் செல்களை வலுவிழக்கச் செய்வதால், முடியின் நிறம் வெளுக்கத் தொடங்குகிறது.

வைட்டமின் பி-12, உடலுக்கு ஆற்றல் அளிக்கவும், முடி வளர்ச்சி மற்றும் முடி நிறத்தை கட்டுப்படுத்தவும் காரணமாக இருக்கிறது. எனவே உடலில் வைட்டமின் பி-12 குறைபாடு இருந்தால், முடி சேதமடையத் தொடங்கும்.

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top