Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, April 6, 2022

தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு பி.எட் பட்டதாரிகள் போட்டி டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் பாதிப்பு.

இந்த ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வான TET தேர்வில் பி.எட் படித்தவர்களும் தாள்-1 எழுத மாநில அரசு அனுமதித்துள்ளதால், தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு பி.எட் பட்டதாரிகளும் போட்டியிடுவார்கள் என்பதால் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் கவலையடைந்துள்ளனர். மார்ச் 7, 2022 ம் அன்று 2019-ல் வெளியிடப்பட்ட ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

அதன்படி, இதுவரை, பி.எட் பட்டதாரிகள் இரண்டாம் நிலை ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய தாள் – 2 எழுத அனுமதிக்கப்பட்டனர். டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி தேர்ச்சி பெற்றவர்கள் TET தாள் – I எழுத தகுதியுடையவர்களாக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இப்போது பி.எட் படித்தவர்களும் TET தேர்வு தாள் – I எழுத அனுமதிக்கப்படுவதால், டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி தேர்ச்சி பெற்றவர்கள் பட்டதாரி ஆசிரியர்களான பி.எட் படித்தவர்களுடன் போட்டியிட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால், டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி தேர்ச்சி பெற்றவர்கள் அளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதாலும் மேலும் இரண்டும் படித்தவர்களின் (D.T.Ed and UG with B.Ed) ஏதாவது ஒரு படிப்பு தேவையற்றது என்ற நிலை உருவாகிறது.

தமிழக அரசு பி.எட் படித்தவர்களை TET தேர்வில் தாள் – I எழுத அனுமதிக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், பி.எட் பட்டதாரிகள் தாள் I-ல் தேர்ச்சி பெற்றால் அவர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று அரசாங்க உத்தரவில் குறிப்பிடப்படவில்லை என்று கல்வியியல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பி.எட் பட்டதாரிகள் தாள் I எழுதலாம் என்று டி.ஆர்.பி கூறியுள்ளது.

பி.எட் படித்தவர்கள், தாள் I எழுதினால் வேலை கிடைக்குமா என்று தெரியவில்லை. தாள் I மற்றும் டி.ஆர்.பி-யில் தேர்ச்சி பெற்றால் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று பலரும் தாள் I தேர்வு எழுத உள்ளதாக தெரிவிக்கின்றன.

இதனால், தமிழக அரசு இந்த விஷயத்தில் தெளிவுபடுத்த வேண்டும் என்பதே டெட் தேர்வு எழுத தாயாராகி வரும் மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News