உடல் எடையை குறைப்பது பலருக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இன்றைய வேகமான மற்றும் ஒழுங்கற்ற வாழ்க்கை முறையில், எடையை அதிகரிப்பு என்பது அதிகமானோர் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
அதனால், நோய் பரவலும் அதிகரித்து வருகிறது. இதனால் நோய் பாதிப்புகளில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால் உடல் எடையை குறைக்க டயட் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்வது அவசியம். அதேநேரத்தில் உணவுப் பழக்க வழக்கங்களில் கட்டுக்கோப்பாக இருப்பதும் அவசியம்.
உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் உணவுக்குப் பிறகு டீ மற்றும் காபி குடிக்கும் பழக்கம் இருந்தால் அதனை கட்டாயம் தவிர்த்து விட வேண்டும். இல்லையென்றால் உங்கள் எடை அதிகரிக்கும். குறிப்பாக, மதிய உணவுக்குப் பிறகு அதைத் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் உடல் எடையைக் குறைக்கும் உங்களின் முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்காது.
டீ மற்றும் காபியை தவிர்த்தல்
உங்கள் மதிய உணவை உண்ணும்போது, உங்கள் முழு கவனமும் உங்கள் உணவில் மட்டுமே இருக்க வேண்டும். சமூக ஊடக பக்கங்களை ஸ்க்ரோலிங் செய்வது, மின்னஞ்சல்களுக்கு பதில் அனுப்புவது அல்லது ட்விட்டரை சரிபார்ப்பது போன்றவற்றில் ஈடுபடக் கூடாது. உங்கள் உணவை உட்கொள்வதற்கு பிற்பகலில் நீங்கள் எடுக்கும் 15 நிமிடங்கள் எந்தவிதமான கவனச்சிதறலும் இல்லாமல் செலவிடப்பட வேண்டும். கவனத்துடன் உணவை உட்கொள்வதற்கும், அதிகப்படியான உணவைத் தடுப்பதற்கும் இது ஒரு சிறந்த வழியாகும்,மேலும் உங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது உங்கள் உணவை மட்டும் உட்கொள்வது நல்லது.
பலர் மதிய உணவுக்குப் பிறகு காபி குடிக்க விரும்புகிறார்கள். இருப்பினும், சாப்பிட்ட உடனேயே அமில உணவுகளை உட்கொள்வது அல்லது சாப்பிடுவது எரிச்சலூட்டும். மேலும், காபியில் உள்ள சர்க்கரை கலோரிகளை அதிகரிக்கிறது. இதன் விளைவாக எடை கூடுகிறது.
உணவுக்குப் பிறகு இனிப்புகளை உண்ணுதல்
சாப்பாட்டுக்குப் பிறகு இனிப்பு வகைகளை சாப்பிடுவது அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் தினமும் இனிப்பு சாப்பிடும் பழக்கம் நல்லதல்ல. தினமும் உணவுக்குப் பிறகு இனிப்புகளைச் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும். எனவே, உணவுக்குப் பிறகு இனிப்பு சாப்பிடுவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.
IMPORTANT LINKS
Friday, April 8, 2022
மதிய உணவுக்கு பிறகு இதையெல்லாம் சாப்பிடாதிங்க.........
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment