Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, April 24, 2022

அடிக்கடி கோவக்காய் சமைக்கிறவங்க வீட்ல எந்தெந்த நோயெல்லாம் வராது தெரியுமா ?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
மனிதர்கள் அனைவரும் உழைக்க வேண்டிய சூழல் இருக்கிறது. நமது ரத்தத்தில் இரும்பு சத்து அதிகம் இருந்தால் நம்மால் சுலபத்தில் சோர்வடையாமல் உழைக்க முடியும்.

கோவக்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடல் சோர்வு நீங்கி, நீண்ட நேரம் செயலாற்றும் திறன் ஏற்படுகிறது. 

தண்ணீர் அதிகம் அருந்தாமை, உப்பு தன்மை அதிகமாக இருக்கும் நீர் அருந்துவது, நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைப்பது குடிப்பது போன்ற காரணங்களால் இன்று பலருக்கும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது. கோவக்காய் அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து, சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும்


கோவைக்காய் முழுத் தாவரமும் இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. கோவைக்காய் கோழையகற்றும்; முறைக் காய்ச்சலைக் கட்டுப் படுத்தும்; சிறு நீர் மற்றும் வியர்வையை பெருக்கும்; வாந்தி உண்டாக்கும்.

கோவைக்காய் இலை இருமல், ஆறாத புண்கள், சிரங்கு, உடல் சூடு, நீர்ச் சுருக்கு ஆகியவற்றைப் போக்கும். கோவைக்காய், கரப்பான், ஜலதோஷம், நீரழிவு போன்ற நோய்களுக்கு மருந்தாகும். கோவைக்காய் வேர், குஷ்டம், பிரமேகம், வாத நோய்கள் ஆகியவற்றுக்கு மருந்தாகும்.

கோவைக்காய் பற்றுக் கம்பிகள் கொண்ட, படர் கொடி வகையான தாவரம். கோவைக்காய் இலைகள் ஐந்து கோணங்களுடைய மடலானவை. மலர்கள் வெள்ளை நிறமானவை. ஆண் பெண் மலர்கள் தனித் தனியாகக் காணப்படும்.

கோவைக்காய்கள் சதைப் பற்றானவை. நீண்ட முட்டை வடிவமானவை. நீள் வாக்கில் வெள்ளை நிறமான வரிகள் கொண்டவை. பழங்கள் இரத்தச் சிவப்பு நிறமானவை.

முதிர்ந்த கோவைக்காய் தாவரத்தில் காணப்படும் வேர் தடித்து, கிழங்கு போல காணப்படும்.

தமிழ்நாடு முழுவதும், சமவெளிப் பகுதியில் வேலியோரங்களிலும் புதர்களிலும், பாழ் நிலங்களிலும் பரவலாக வளர்கின்றன. முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது.

கோவைக்காயில், சாம்பார், கூட்டு போன்றவை செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர வயிற்றுப் புண், வாய்ப்புண், உதடு வெடிப்பு ஆகியன குணமாகும்.

கோவைக்காய் இலைச் சாறு 20மிலி உடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து ஒரு டம்ளர் நீராகாரத்துடன் கலக்கி காலையில் மட்டும் குடித்து வர வேண்டும். 7 நாட்கள் வரை சாப்பிட வெட்டை நோய் குணமாகும்.

கோவைக்காய் இலைச் சாற்றை சம அளவு தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் கொதிக்க வைத்து, வடிகட்டி வைத்துக் கொண்டு, மேல் பூச்சாகப் பூச வேண்டும். மேலும் ஒரு பிடி இலையை ஒன்றிரண்டாக நசுக்கி இரண்டு டம்ளர் நீரில் இட்டு பாதியாக காய்ச்சி, வடிகட்டி குடிக்க வேண்டும். 7 நாட்களுக்கு காலை, மாலை வேளைகளில் இவ்வாறு செய்து வர படை, சொரி, சிரங்கு போன்றவை குணமாகும்.

கோவைக்காய் இலைச் சாறு, காலை, மாலை 50 மிலி அளவு 4 நாள்கள் குடித்து வர சீத பேதி குணமாகும்.

கோவைக்காய் வேர்க்கிழங்கு சாறு 10 மிலி காலையில் மட்டும் குடித்து வர ஆஸ்துமா குணமாகும்.

சுவையின்மை தீர கோவைக்காயை நறுக்கி காய வைத்து, வற்றலாக்கி வைத்துக் கொண்டு நெய்யில் வறுத்து சாப்பிட வேண்டும். அல்லது கோவைக்காயை ஊறுகாய் செய்தும் சாப்பிட்டு வரலாம்.

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top