Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 17, 2022

மத்திய அரசு ஊழியர்கள் இதனை பயன்படுத்த தடை.. NIC போட்ட அதிரடி உத்தரவு!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
மத்திய அரசு ஊழியர்கள் இனி கூகுள் டிரைவ், டிராப்பாக்ஸ் மற்றும் விபிஎன் ஆகியவற்றைப் பயன்படுத்த தடை விதித்து உத்தரவு.
மத்திய அரசு ஊழியர்கள் மெய்நிகர் தனியார் நெட்வொர்க்குகள் (VPN) மற்றும் Google Drive மற்றும் Dropbox போன்ற கிளவுட் சேவைகளைப் பயன்படுத்த முடியாது என இந்திய அரசின் சமீபத்திய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கணினி அவசரகால பதில் குழு (Cert-In) மற்றும் தேசிய தகவல் மையம் (NIC), கூகுள் டிரைவ், டிராப்பாக்ஸ் மற்றும் விபிஎன் ஆகியவற்றைப் பயன்படுத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு மூலம் இந்தியாவில் VPN சேவை வழங்குநர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த உத்தரவின்படி, கூகுள் டிரைவ் மற்றும் டிராப்பாக்ஸ் போன்ற ந்தவொரு அரசு அல்லாத கிளவுட் சேவைகளில் (cloud services) இனி கட்டுப்படுத்தப்பட்ட அல்லது எந்த ரகசிய அரசாங்க தரவுக் கோப்புகளையும் மத்திய அரசு ஊழியர்கள் சேமிக்க முடியாது என கூறப்பட்டுள்ளது.

கிளவுட் சேவைகள் பயனர்கள் தங்கள் தரவை இணையத்தில் சேமிக்க அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், அவர்களின் சாதனங்களின் internal memory-ல் அல்ல. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Meity) அமைத்த விதிகள், அரசாங்கத்தின் பாதுகாப்பு நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. VPN சேவைகள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், பயங்கரவாத அமைப்புகளால் அவற்றைப் பயன்படுத்த முடியும் என்றும், அவற்றைக் கண்காணிக்க இயலாது எனவும் இந்திய அரசு கருதுகிறது.

NIC உத்தரவு என்ன சொல்கிறது? அரசாங்கத்தின் ரகசியத் தகவல்களைச் சேமிக்க ஊழியர்கள் கிளவுட் சேவைகளைப் பயன்படுத்தக் கூடாது. VPN சேவைகளைப் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டது. அரசு ஊழியர்கள் கேம்ஸ்கேனர் போன்ற அரசாங்க ஆவணங்களை ஸ்கேன் செய்ய மூன்றாம் தரப்பு மொபைல் ஆப் ஸ்கேனர் சேவைகளை பயன்படுத்த வேண்டாம். தங்கள் மொபைல் போன்களை 'ஜெயில்பிரேக்' செய்யவோ அல்லது 'ரூட்' செய்யவோ வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் ஒரே மாதிரியான சைபர் பாதுகாப்பு (cyber security guidelines) வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட வேண்டும். இதன் மூலம், அரசாங்கத்தின் பாதுகாப்பு நிலையை மேம்படுத்த முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து அரசு ஊழியர்களும் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அப்படி மீறினால் அந்தந்த சிஐஎஸ்ஓக்கள் துறைத் தலைவர்களால் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற விரும்பாத நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேற சுதந்திரம் உண்டு எனவும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top