அரசு பள்ளி மாணவர்களுக்கு இடையே நடத்தப்பட்ட செஸ் போட்டிகளில் வெற்றிபெற்ற 100 பேர் இன்று தனி விமானத்தில் சென்னையில் இருந்து பெங்களூரு செல்கிறார்கள்.
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்கள் இடையே செஸ் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற 100 மாணவ, மாணவிகள் சிறப்பு விமானத்தில் சென்னையில் இருந்து பெங்களூரு சென்று வர தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி 100 மாணவர்களும் இன்று (புதன்கிழமை) மதியம் 1 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் செல்கிறார்கள். இந்த சிறப்பு விமானத்தை அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment