Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, July 22, 2022

CBSE - 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு: 92.71 % மாணவர்கள் தேர்ச்சி

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. cbse.results.nic. இந்த என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம். நாடு முழுவதும் மத்திய கல்வித்திட்டத்தின் கீழ் படிக்க கூடிய சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான இரு தேர்வு முடிவுகள் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

2 பருவங்களாக நடத்தப்பட்ட தேர்வின் இறுதி முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளானது சிபிஎஸ்இ அதிகார பூர்வ இணையதளமான cbse.results.nic.in என்ற இணையதளத்திலும் results.cbse.nic.in என்ற இரண்டு இணையத்தளத்திலும் இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் இருந்து பல லட்சம் மாணவர்கள் இந்த பொது தேர்வை எழுதி முடிவுகளுக்காக காத்திருந்தனர். மாணவர்கள் தங்கள் உயர்கல்வியை படிப்பதற்கு மிகவும் முக்கிய வாய்ந்ததாக பார்க்கப் படக்கூடிய பொது தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

ஏற்கனவே முதல் மற்றும் இரண்டாம் பருவ மதிப்பெண்களை மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த பணிகள் சுமார் ஒரு மாத காலம் எடுக்கும் என்பதால் காலதாமதம் ஏற்பட்டதாக ஒன்றிய கல்வி அமைச்சகம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது இந்த 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதில் 92.71 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மூலமாக உயர்கல்விக்கு விண்ணப்பிக்க வலியுறுத்தப்பட்டுள்ளனர். அனைத்து மாநிலங்களிலும் உள்ள கல்வி நிலையங்கள் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளுக்காக தங்களுடைய மாணவர் சேர்க்கையை சிறிதுகாலம் நிறுத்திவைக்க வேண்டும் என்று யுஜிசி தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து 5 நாட்கள் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் க்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News