டிஎன்பிஎஸ்சி குரூப் 4 (TNPSC Group 4) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு வரும் 24ம் தேதி நடைபெறுகிறது.
தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கான அனுமதிச் சீட்டு பதவியேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே தேர்வு எழுதுபவர்கள் கடைசி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
பதிவிறக்கம் செய்வது எப்படி?
www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு செல்லவும்.
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்ய வேண்டும்.
திரையில் தோன்றும் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
அனுமதிச்சீட்டு தனியாக அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட மாட்டாது. எனவே, விண்ணப்பதாரர்கள் மேற்கூறிய செயல்முறைகளை பின்பற்றி பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அனுமதிச் சீட்டு அவசியம்:
மேலும், அனுமதிச்ச சீட்டில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அனுமதிச் சீட்டு இல்லாதவர்கள் தேர்வு மையத்திற்குள் கட்டாயம் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், தேர்வர்கள் தங்களது ஆதார் அட்டை/பாஸ்போர்ட்/ ஓட்டுநர் உரிமம், நிரந்தரக் கணக்கு அட்டை/வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் ஒலிநகலை தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும்.
அனுமதிச் சீட்டில் ஏதேனும் பிரச்சனை இருந்தால்?
மேலும், அனுமதிச்சீட்டில், புகைப்படம் அச்சிடப்படவில்லை அல்லது தெளிவாக இல்லை அல்லது தோற்றத்துடன் பொருத்தவில்லை என்றாலோ, கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம் ஒன்றினை ஒரு வெள்ளை காகிதத்தில் ஒட்டி, அதில் உங்களது பெயர், முகவரி, பதிவு எண்ணை குறிப்பிட்டு, முறையாகக் கையொப்பமிட்டு, அனுமதிச்சீட்டின் ஒளிநகல் மற்றும் ஆதார் அட்டை / கடவுச்சீட்டு(Passport)/ஓட்டுநர் உரிமம் / நிரந்தரக்கணக்கு அட்டை(PAN card) / வாக்காளர் அடையாள அட்டை, இவற்றில் ஏதேனும் ஒன்றின் ஒளிநகலை இணைத்து, அதனை தலைமைக் கண்காணிப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வுக்கு பின்பும் அனுமதிச் சீட்டு தேவைப்படும்:
தேர்வர்கள் அனுமதிச்சீட்டினை தங்களது பாதுகாப்பில் நிரந்தரமாக வைத்துக் கொள்ளவேண்டும். தேர்வர்கள், தங்களது அனுமதிச்சீட்டினை அடுத்த கட்ட தேர்வுக்கு (உதாரணமாக, கலந்தாய்வு, சான்றிதழ் சரிபார்ப்பு) தெரிவு செய்யப்படும் நேர்வுகளில் தேர்வாணையத்தால் கோரப்படுகின்ற நேர்வுகளில், சமர்ப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment