Saturday, October 8, 2022

ஆசிரியர் நியமனத்துக்கான போட்டித் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

ஆசிரியர் நியமனத்துக்காக அரசுஅறிவித்துள்ள போட்டித் தேர்வைரத்து செய்ய வேண்டும் என்றுமுன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரைஆண்டுகள் கடந்த நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களை போட்டித் தேர்வின்றி பணியமர்த்துவது குறித்தோ, வெயிட்டேஜ் முறையைநீக்குவது குறித்தோ எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை.

போட்டித் தேர்வை எதிர்த்து குரல் கொடுத்த திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு, தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு ஆசிரியர் தேர்வுவாரியத்தால் போட்டித் தேர்வுநடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. ‘திராவிட மாடல்’ என்றபோர்வையில் தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் முரணாக திமுகஅரசு முடிவெடுத்ததற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். போட்டி தேர்வை ரத்துசெய்து,தேர்ச்சி மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News