Join THAMIZHKADAL WhatsApp Groups
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பன்னோக்கு (தொழில்நுட்பம் சாராத) பணியாளர் மற்றும் ஹவல்தார் (சிபிஐசி & சிபிஎன்) தேர்வு- 2022 தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection commission) வெளியிட்டுள்ளது.
இந்த ஆட்சேர்ப்பின் மூலம் 11,409 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காலியிடங்கள்:
பன்னோக்கு (தொழில்நுட்பம் சாராத) பணியாளர் : 10880
ஹவல்தார் (சிபிஐசி & சிபிஎன்) : 529
இந்த எண்ணிக்கை தோராயமானது என்றும், நிர்வாகக் காரணங்களினால் மேலும் அதிகரிக்கவோ, குறையவோ கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு : பன்னோக்கு பதவிக்கு விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01/01/2023 அன்று 18 முதல் 25 வருடங்களாக இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர் 20/01/1998 தேதிக்கு முன்பு அல்லது 01/01/2005 தேதிக்கு பிறகு பிறந்திருக்கக் கூடாது.
ஹவல்தார் பதவிக்கு விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01/01/2023 அன்று 18 முதல் 27 வருடங்களாக இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர் 02/01/1996 தேதிக்கு முன்பு அல்லது 01/01/2005 தேதிக்கு பிறகு பிறந்திருக்கக் கூடாது.
இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.
கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வாரியத்தில் இருந்து 10ம் வகுப்பு அல்லது சமமான தேர்வில் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்வது எப்படி? 17-02-2023 அன்றைக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பபம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இணைய தள முகவரி https://ssc.nic.in/ ஆகும்.
தேர்ச்சி முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு, உடற் திறன் தேர்வு (Physical Efficiency Test), உடற் தகுதி தேர்வு (Physical Standard Test - ஹவல்தார் பதவிக்கு மட்டும்) ஆகியவற்றில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி முறை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 ஆகும். பட்டியல் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள், அணைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள், முன்னாள் இராணுவத்தினர் ஆகியோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டாம்.
No comments:
Post a Comment