Join THAMIZHKADAL WhatsApp Groups
2010 ஆண்டு கலைஞர் பிறந்தநாள் அன்று போடப்பட்ட அரசாணையை தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் மீண்டும் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரிகள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை
கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு தங்களை பழிவாங்கும் நோக்கில் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு உள்ளனர்
உங்கள் அப்பா போட்ட கையெழுத்தை நீங்கள் உயிர் கொடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு வேண்டுகோள்
சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் 300க்கும் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் ரத்தினகுமார்.
2010 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் பதவி மூப்பு பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் சான்றிதழ் சரி பார்க்கப்பட்டு நான்கு முறை லிஸ்ட் எடுக்கப்பட்டு அதற்கான பணி நியமனையும் செய்யப்பட்டுள்ளனர். அதற்குப் பிறகுதான் கடைசியாக மீதமுள்ள 2000 காலி பணியிடங்களை பதவி மோப்பு மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தங்களுக்கான காலி இடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை வைத்தனர்
மேலும் படிக்க | பதவியை ராஜினாமா செய்தார் நியூசிலாந்து பிரதமர்......காரணம் என்ன?
அதன் தொடர்ச்சியாக 2013ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு அதற்கான அரசாணையை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி வெளியிட்டுள்ளார் எனவும்
கடந்த 10 ஆண்டில் அதிமுக எடப்பாடி ஆட்சியில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு தங்களை பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டு உள்ளனர்
மேலும் திமுக ஆட்சி பதிவேற்று இரண்டரை ஆண்டுகள் நிருவடையும் நிலையில் தற்போது வரை தங்களுக்கு பணி நியமனம் செய்யப்படவில்லை எனவும் அதேபோல் வயது வரம்பு பாக்காமல் பணி நியமனம் செய்துள்ளதாகவும் தங்களுக்கு தற்போது வரை எந்த ஒரு பதிலும் தமிழக அரசு சார்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு 7.1.2023 அன்று 16,000 இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரிகள் ஆசிரியர்களை தற்காலிகமாக உடனடியாக இல்லம் தேடி கல்வி திட்டம் மூலமாக பணி வழங்க உத்தரவிட்டதை தொடர்ந்து தான் தாங்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்தோம் என குறிப்பிட்டார்.
மேலும் படிக்க| மீண்டும் மீண்டும் சர்ச்சையை கிளப்பும் தமிழ்நாடு ஆளுநர்...எம்.பி.வெங்கடேசன் குற்றச்சாட்டு!
தங்களுக்கு 193 46 169 170 அரசாணையில் 9176 பட்டதாரி ஆசிரியர்களுக்கு காலிப் பணியிடங்கள் நிரப்பாமல் உள்ளது எனவும் ஆனால் தற்போது நாங்கள் 2000 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளோம் இதனை எங்களுக்கு உடனடியாக பணி வழங்குமாறு கேட்டுக் கொண்டார் குறிப்பாக தங்களது கோரிக்கையில் அனைத்து தகுதியும் அனைத்து அரசனையும் சரியாக இருந்தும் தற்போது இருக்கும் தமிழக அரசு தங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதையும் கண்டித்து தங்களுக்கு முடிவு சொல்லும் வரை தங்களது போராட்டம் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment