Join THAMIZHKADAL WhatsApp Groups
10, 12-ஆம் வகுப்புகளுக்கான 2023-ஆம் ஆண்டு பொதுத் தேர்வு தொடங்கவிருக்கும் நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) விரைவில் நுழைவுச் சீட்டினை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கான நுழைவுச் சீட்டு வெளியானதும், மாணவர்கள் www.cbse.nic.in அல்லது www.cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களிலிருந்து நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இரு வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளும் 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளன. இதில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாா்ச் 21-ஆம் தேதியும், 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 5-ஆம் தேதியும் நிறைவடைய உள்ளன.
தேர்வுகளானது காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு நிறைவடைகிறது. மேலும் விவரங்களுக்கு cbse.nic.in என்ற சிபிஎஸ்இ வலைதளத்தை பாா்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
முன்னதாக, செய்முறைத் தேர்வுகள் ஜனவரி 2ஆம் தேதி முதல் தொடங்கப்பட வேண்டும் என்று சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது. செய்முறைத் தேர்வுகள், தேர்வு மதிப்பீடுகள் மற்றும் அக மதிப்பீடுகளை பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் எனவும் சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment