Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, February 21, 2023

10ம் வகுப்பு பொதுத் தேர்வின் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு மார்ச் 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு 10ம் வகுப்பு பொதுத் தேர்வின் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு மார்ச் 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
10ம் வகுப்பு பொதுத் தேர்வின் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு மார்ச் 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

செய்முறை தேர்வில் தனித்தேர்வர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது. நடைபெறவுள்ள ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதவுள்ள தனித்தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் கலந்து கொள்வது குறித்த 'செய்திக்குறிப்பு' இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது. இதனை அனைத்து தனித்தேர்வர்களும், பொது மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் தங்களது நாளேடுகளில் செய்தியாக வெளியிடுமாறும், தொலைக் காட்சியில் ஒலி/ஒளி பரப்பிடுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் பாட செய்முறை தேர்வில் தனித்தேர்த்தவர்கள் கலந்துகொள்ளுதல் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு, 20.03.2023 முதல் 24.03.2023 வரை, அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறவுள்ளது. ஏப்ரல் 2023, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுத விண்ணப்பித்துள்ள நேரடி தனித்தேர்வர்கள் மற்றும் ஏற்கனவே அறிவியல் பாட செய்முறைத் தேர்வெழுதி அத்தேர்வில் தேர்ச்சிபெறாத தனித்தேர்வர்கள், மேற்படி தேதிகளில் நடைபெறவுள்ள அறிவியல் பாட செய்முறைத் தேர்வில், தவறாமல் கலந்து கொண்டு செய்முறைத் தேர்வெழுதிட அறிவிக்கப் படுகிறார்கள்.

அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடைபெறவுள்ள தேதி குறித்து, அறிவியல் செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளியிலிருந்து அறிவிப்பு ஏதும் தங்கள் முகவரிக்கு கிடைக்கப் பெறாதவர்கள், இவ்வறிவிக்கையை தெரிந்துகொண்டு, அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தவறாமல் கலந்து கொள்ளும் பொருட்டு, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News