Join THAMIZHKADAL WhatsApp Groups
10ம்-வகுப்பு பொதுத்தேர்வில், சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழியில் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து, அவரவர் தாய்மொழியில் பாடத்தேர்வு எழுவதற்கு அனுமதியளித்து அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதிலும் உள்ள சிறுபான்மை பள்ளிகளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் தமிழக ஏற்கனவே கொண்டுவந்த கட்டாயம் தமிழ் படிக்க கூடிய அந்த சட்டத்தின் அடிப்படையில் தமிழ் பாடத்தேர்வை எழுதவேண்டும் என உள்ளது. ஆனால் அவரவர் தாய் மொழியில் மொழிப்பாட தேர்வை எழுத அனுமதிவழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அது சார்ந்த அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழ்ப்பாட தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பின் அடிப்படையில், தற்போது தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றைக்கையில்:
விரைவில் நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில், சிறுபான்மை பள்ளிகளில் படிக்க கூடிய மாணவர்கள் தமிழ்ப்பாட தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் அவரவர் தாய் மொழியில் மொழிப்பாட தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் சுமார் 10,000 மாணவர்கள் கட்டாயமாக தமிழ் பாட தேர்வு எழுத வேண்டும் என்பதில் இருந்து விலக்கு பெருகின்றனர்
No comments:
Post a Comment