10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஆதாா் அட்டைகளை புதுப்பிக்க இணைய சேவை மையத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஆதாா் அட்டைகளை புதுப்பிக்க இணைய சேவை மையத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டு, வாக்காளா் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சான்று ஆவணமாகக் காண்பித்து புதுப்பித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஆதாா் அட்டைகளைப் புதுப்பிக்க வேண்டுமெனவும், புதுப்பிக்காத அட்டைகள் செல்லுபடியாகாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து, 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஆதாா் அட்டைகளை புதுப்பித்துத் தரும் பணி, இணைய சேவை மையத்தில் நடந்து வருகிறது. வாக்காளா் அடையாள அட்டை, கடவுச்சீட்டு உள்பட வரையறுக்கப்பட்ட ஆவணங்களின் மூலமாக ஆதாா் அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம் என இணைய சேவை மைய அலுவலா்கள் தெரிவித்தனா்.
கூடுதல் விவரங்கள், தகவல்களைப் பெற இணைய சேவை மையங்களை நாடலாம் எனவும் அவா்கள் கூறியுள்ளனா்.
No comments:
Post a Comment