Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, February 26, 2023

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 10 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்பறைகள் நவீன வசதிகள் தீவிரம் - சென்னை மாநகராட்சி தகவல்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
சென்னை மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சென்னை பள்ளிகளில் உள்ள 10 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் வகுப்பறைகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்திடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ் 32 மேல்நிலைப்பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 92 நடுநிலைப்பள்ளிகள், 119 தொடக்கப்பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மாநகராட்சி பள்ளிகளில் 98,633 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 3013 ஆசியர்கள் பணிபுரிகின்றனர்.

தமிழ்நாடு முதல்வர், தனியார் பள்ளிகளுக்கு நிகராக சென்னை பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறுவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதனடிப்படையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படியும், மேயரின் ஆலோசனையின்படியும் சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் சென்னை பள்ளிகளில் டிஜிட்டல் முறையிலான வள வகுப்பறைகள் அமைத்தல், பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மற்றும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கற்கும் முறை, நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களுக்கான கழிப்பறைகள் அமைத்தல் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல் மற்றும் அனைத்து பள்ளிகளிலும் சீர்மிகு வகுப்பறைகள் நிறுவுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் ஆகியவை இணைந்து 'சென்னை பள்ளிகளில் முழுமையான மாற்றம்' என்ற அடிப்படையில் டிஜிட்டல் உட்கட்டமைப்பு, கற்பித்தல் முறை, ஆசிரியர்களின் பயிற்சி, விளையாட்டு மற்றும் இதர வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது, சென்னை பள்ளிகளை பல பரிமாணங்களில் முழுமையாக மாற்றும் முயற்சியாகும்.

சென்னை பள்ளிகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்திட CITIIS, நமக்கு நாமே திட்டம், ஸ்மார்ட் சிட்டி, சிங்கார சென்னை 2.0 மற்றும் நிர்பயா திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதியின் கீழ் (CSR Fund) பள்ளிகளில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட உறுதுணையாக உள்ளன.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பள்ளிகளில் உள்ள 10 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் வகுப்பறைகளில் ஸ்மார்ட் போர்டு, ஆசிரியர்களுக்கு மடிக்கணினி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய மேசைகள், ஒரு வருடத்திற்கு இணையதள வசதி, வண்ணமயமான ஓவியத்துடன் கூடிய வகுப்பறைகள் ஆகியவற்றை அமைத்திட ரூ.56,60,100 மொத்த மதிப்பீட்டில் டோரண்ட் கேஸ் சென்னை பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதியில் (CSR Fund) ரூ.28,87,500- மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

சென்னையின் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் நிதி பங்களிப்புடன் சுமார் ரூ.200 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சியில் மென்மேலும் பெருநிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பு நிதியுடன் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பள்ளிகள், பூங்காக்கள் மற்றும் மருத்துவமனைகளை மேம்படுத்த விரும்பும் பெருநிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் வட்டார துணை ஆணையர்கள் மற்றும் மண்டல அலுவலர்களை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரூ.200 கோடிமதிப்பில்பணிகள் சென்னையின் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் நிதி பங்களிப்புடன் சுமார் ரூ.200 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News