Join THAMIZHKADAL WhatsApp Groups
டீச்சிங் மற்றும் நான் டீச்சிங் என 2 பிரிவாக இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு 10ம் வகுப்பு, டிகிரி, டிப்ளமோ, பிஎட் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.35 ஆயிரம் வரை வழங்கப்படும். இதில் 4,188 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்பட உள்ளது.
தக்னிகி ஷிக்சா விதான் கவுன்சில் எனும் டிஎஸ்விசி (Takniki Shiksha Vidhaan Council or TSVC) என்பது இந்திய யோகா அமைப்பின் சான்று பெற்ற சுதந்திரமான அமைப்பாகும். இந்தியாவில் யோகா கல்வியின் வளர்ச்சிக்காக இது துவங்கப்பட்டுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாடு மற்றும் திட்டமிடல் கமிஷனின் அனுமதியுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட என்ஜிஓவாக இது செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் டிஎஸ்விசியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள் எவ்வளவு?
டிஎஸ்விசியில் மொத்தம் 13 ஆயிரத்து 20 பணியிடங்கள் காலியாக உள்ளன. யோகா டீச்சர், ஆர்ட்ஸ் (Arts) டீச்சர், உருது டீச்சர், ஹிந்தி டீச்சர், தெலுங்கு டீச்சர், ஆங்கில டீச்சர், கணக்கு டீச்சர், ஜெனரல் சயின்ஸ் டீச்சர், சோசியல் ஸ்டடீஸ் டீச்சர், லைப்ரேரியன், டெக்னிக்கல் அசிஸ்டென்ட், ஆபிஸ் சபோடினேட் ஆகிய பிரிவுகளில் 12 பிரிவுகளில் தலா 1085 பேர் காலியிடங்கள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 4,188 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்பட உள்ளது.
கல்வி தகுதி என்ன?
யோகா டீச்சர் பணிக்கு 12ம் வகுப்பு படித்து யோகாவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆர்ட்ஸ் (Arts) டீச்சர் பணிக்கு 10, 12, டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். உருது, ஹிந்தி, தெலுங்கு , ஆங்கிலம், கணக்கு, ஜெனரல் சயின்ஸ் ஆசிரியர் பணிக்கு உரிய பாடத்தில் பிஎட் முடித்திருக்க வேண்டும். சோசியல் ஸ்டடீஸ் ஆசிரியர் பணிக்கு பிஎட் முடித்திருக்க வேண்டும். லைப்ரேரியன் பணிக்கு டிப்ளமோ, டிகிரியும், டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு கம்யூட்டர் சயின்ஸ் அல்லது ஐடி பிரிவில் டிப்ளமோ, டிகிரி, என்ஜினீயரிங் முடித்திருக்க வேண்டும். ஆபிஸ் சபோடினேட் பணிக்கு 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு என்ன?
பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சமாக 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபட்சமாக 40 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஒபிசி பிரிவினருக்கு 5 வயது வரை தளர்வு உண்டு. வயது வரம்பு என்பது 2023 ஜூலை 1ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
மாத சம்பளம் என்ன?
யோகா டீச்சர், ஆர்ட்ஸ் (Arts) டீச்சர் பணிக்கு மாதம் ரூ.32 ஆயிரம், உருது, ஹிந்தி, தெலுங்கு , ஆங்கிலம், கணக்கு, ஜெனரல் சயின்ஸ் ஆசிரியர் பணிக்கு மாதம் ரூ.35 ஆயிரம், லைப்ரேரியன், டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு ரூ.30 ஆயிரம், ஆபிஸ் சபோடினேட் பணிக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் பிப்ரவரி 25ம் தேதிக்குள் பணிக்கு tsvc.in எனும் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வாகும் நபர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, அசாம் மாநிலங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணClick Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்யClick Here
No comments:
Post a Comment