Join THAMIZHKADAL WhatsApp Groups
இடுப்பு வலி, மூட்டு வலி, முதுகு வலி, என உடலின் வலிகள் அனைத்தையும் போக்கக்கூடிய அற்புதமான பானம் இது. இது நமது வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே தயாரித்துவிடலாம். அவ்வளவு எளிமையான வைத்திய முறை. இதை 15 நாட்கள் குடித்து வந்தால் இடுப்பு பகுதி, மூட்டு பகுதி நன்கு வலுவாகும்.
இதற்கு தேவையான பொருட்கள்:
1. வெந்தயம்
வலியுள்ள இடங்களில் வெந்தயத்தை ஊற வைத்து பேஸ்டாக்கி தடவினாலே வலி குறையும்.
2. சீரகம்
3. மிளகு
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்க்கவும். பின்னர் அதில் அரை ஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் மிளகு சேர்க்கவும். இது லேசாக ஈரப்பதம் போக வறுத்துக்கொள்ளவும். இதை நிறைய நேரம் வறுக்கக்கூடாது. அதில் உள்ள ஈரப்பதம் போனாலே போதும்.
ஏனெனில் இது சாதாரணமாக பொடியாக முடியாது. அதனால்தான் லேசாக வருத்தோம் அல்லது வெயிலில் காய வைத்தோ பொடியாக்கிக் கொள்ளலாம். வருத்த பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக்கிக் கொள்ளவும்.
இன்னும் அளவு கூட வேண்டும் என்றால் இதே அளவில் இன்னொரு மடங்கு சேர்த்து கூட பொடியாக்கி காட்டு போகாத டப்பாவில் போட்டு பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம்.
ஒரு டம்ளரில் அரைத்து வைத்த பவுடரில் இருந்து ஒரு ஸ்பூன் போடவும். பிறகு அதில் 200 மில்லி சூடான வெந்நீர் ஊற்றவும். இதை ஒரு கலக்கு கலக்கி அப்படியே குடிக்க வேண்டியது தான். இதில் சுவைக்காக வேறு எதையும் சேர்க்க வேண்டாம். ஏனெனில் இது கசப்பாக இருக்காது.
இதை காலையில் வெறும் வயிற்றிலும் மாலை காபி டீ குடிப்பதற்கு பதிலாகவும் குடித்து வரலாம். தொடர்ந்து 15 நாள் குடித்து வர இடுப்பு பகுதி, கை கால் பகுதி, தொடை பகுதியில் உள்ள எலும்புகள் நல்ல வலுவாகும்.
No comments:
Post a Comment