Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, February 20, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.02.2023

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups


 திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: அடக்கம் உடைமை

குறள் எண் : 128
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.

பொருள்:
ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்

பழமொழி :

A stitch in time saves nine.
விரிசலைச் சரி செய்து விட்டால் உடைவது தப்பும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பொய் உரக்க குரல் கொடுத்தாலும் உண்மை பேசுவேன். 

2. ஏனென்றால் உண்மை ஒரு போதும் உறங்காது ஊமையாகவும் இருக்காது

பொன்மொழி :

நேற்றைய மனிதனின் வாழ்க்கை உண்மையும், எளிமையும் கொண்டதாயிருந்தது. இன்றோ சுகங்களையே அதிகம் விரும்பும் கேவலநிலைக்கு அது தள்ளப்பட்டுவிட்டது. சுகங்கள் அதிகரிக்கவும் ஒழுக்கங்கள் தேய்ந்து மறையலாயிற்று.

பொது அறிவு :

1. வரதட்சணை ஒழிப்புச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது? 

1961. 

2. தமிழக சட்டசபையில் மொத்த உறுப்பினர்கள் எத்தனை பேர்? 

234 பேர்

English words & meanings :

ant that is important - significant

ஆரோக்ய வாழ்வு :

சமைத்த உணவுகளுடன் ஒப்பிடும் போது சமைக்காத உணவுகளில் நார்ச்சத்து மிகுதியாக காணப்படுகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகள் ஆகியவை உடல் எடை குறைக்க உதவும். மேலும், ரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும்.

NMMS Q

குளோரெல்லாவில் நிறைந்து காணப்படுவது__________ 

விடை: புரதம் & வைட்டமின்கள்


பிப்ரவரி 20

உலக நீதி நாள்

சமூக நீதிக்கான உலக நாள் அல்லது உலக நீதி நாள் (World Day of Social Justice) என்பது உலக நாடுகள் முழுவதும் ஆண்டுதோறும் பெப்ரவரி 20 ஆம் நாளன்று கடைப்பிடிக்கப்படும் நாளாகும். வறுமையைப் போக்கவும், வேலையின்மையின் பிரச்சினைகளைக் கையாளும் முயற்சிகளை ஊக்குவிக்கவும், இந்நாள் அங்கீகரிக்கப்படுகிறது. மேலும் இந்நாளில், ஐக்கிய நாடுகள் அவை, மற்றும் சர்வதேச தொழிலாளர் அலுவலகம் உட்பட, பல அமைப்புக்கள் மக்கள் சமூக நீதி முக்கியத்துவம் பற்றிய அறிக்கைகளை தயாரிக்க அமைக்கப் பெற்றுள்ளது.

நீதிக்கதை

தூக்கணாங்குருவி

ஒரு மரத்தில் இரண்டு தூக்கணாங் குருவிகள் கூடு கட்டிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தன. ஒரு நாள் கனமான மழை பெய்தது. கடுங்குளிர் அடிக்கத் துவங்கியது. அந்த மரத்திற்கு குளிரில் நடுங்கியபடி ஒரு குரங்கு வந்து சேர்ந்தது. குளிரில் நடுங்கியபடி இருந்த குரங்கைப் பார்த்து இரக்கப்பட்ட தூக்கணாங் குருவிகள்,

குரங்கே, உனக்குக் கை, கால்கள் இருந்தும் இப்படி மழை, குளிர், வெயில் போன்ற துன்பத்தை ஏன் அனுபவிக்க வேண்டும்?. நீ உனக்கென்று ஒரு வீடு கட்டிக் கொண்டால் இந்த துன்பமில்லாமல் இருக்கலாமே? என்றது. ஆனால் அதைக் கேட்டதும் அந்தக் குரங்குக்கு கோபம் வந்தது. 

வல்லவனான எனக்கு இந்த தூக்கணாங்குருவிகள் அறிவுரை சொல்வதா? என்று எண்ணியபடி, எனக்கு வீடு கட்டும் சக்தி இல்லை. ஆனால், நீங்கள் கட்டியிருக்கும் உங்கள்வீட்டை எப்படிப் பிரித்து எரிகிறேன் பார்? என்றபடி குருவிகளின் கூட்டைப் பிரித்தெறிந்தது.

பாவம் தூக்கணாங்குருவிகள் தகுதியில்லாத குரங்குக்கு சொன்ன அறிவுரையால் தங்கள் வீட்டை இழந்தது. தகுதியில்லாத எவருக்கும் அறிவுரை சொன்னால் இழப்பு நமக்குத்தான் என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.

இன்றைய செய்திகள்: 20.02.2023


* அப்துல் கலாம் திட்டத்தின் கீழ் மாணவ மாணவியர் தயாரித்த 150 செயற்கைக் கோள்கள் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டன.

* ஐக்கிய அரபு அமீரகம் 200 படுக்கை கொண்ட ஒரு மருத்துவமனை துருக்கியில் பூமியதிர்ச்சி பாதிக்க பட்டவர்களுக்காக திறந்துளளது.

* தந்தைக்கு கல்லீரலின் ஒரு பாகத்தை தானம் செய்த 17 வயது மகள்..தடைக்கற்களை மீறி சரித்திரம் படைத்த சிறுமி..!

* சர்வதேச போட்டிகளில் அதிவேகமாக 25 ஆயிரம் ரன்களை எடுத்து சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் 20 ரன்கள் எடுத்த விராட் கோலி இந்த புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார்

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அசத்திய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Today's Headlines

 * 150 satellites made by students under the Abdul Kalam project were successfully launched yesterday.

 * UAE opens 200-bed hospital for earthquake victims in Turkey

 * A 17-year-old daughter who donated a part of her liver to her father..a girl who broke barriers and created history..!

 * Virat Kohli has broken Sachin Tendulkar's record by scoring 25,000 runs in the fastest international matches.  Virat Kohli made this new record by scoring 20 runs in the 3rd Test against Australia

 * In the second Test against Australia, the Indian team won by 6 wickets.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News