Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, February 13, 2023

சுகாதாரத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: பிப்.23க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups


தமிழ்நாடு சுகாதாரத் துறையில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள அறுவைசிகிச்சைக் கூட உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு சுகாதாரத்துறையில் பணியாற்ற வேண்டும் என நினைப்பவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பதவி: அறுவைசிகிச்சைக் கூட உதவியாளர்

காலியிடங்கள்: 335

சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400

தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருப்பதுடன் ஒரு ஆண்டு அறுவைசிகிச்சைக் கூட உதவியாளர் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 1.7.2023 தேதியின்படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ, பிசி, பிசிஎம், எம்பிசி, டிஎன்சி பிரிவினருக்கு உச்ச வயதுவரம்பில்லை.

விண்ணப்பிக்கும் முறை: https://mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், விதவைகள் பிரிவினர் ரூ.300, மற்ற அனைத்து பிரிவினர் ரூ.600. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 23.2.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும். ...

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News