Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, February 23, 2023

வரும் 25-ம் தேதி தான் கடைசி நாள்.! ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு.!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 தற்காலிக விடைக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது ‌.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2021இல் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்விற்கு உரிய தாள் 2க்கான தேர்வுகள் கம்ப்யூட்டர் மூலம் பிப்ரவரி 3-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையிலும் நடத்தப்பட்டது. தற்போது தேர்வுக்கான கேள்விகளுக்கு உரியத் தற்காலிக உத்தேச வினைக்குறிப்புகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.tn.nic.in வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேதியில் எந்த அமர்வில் தேர்வு எழுதியவர்களோ அந்த அமர்வுக்கு உரிய Master Quotion Paper TRB இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் வெளியிடப்பட்டுள்ள தற்காலிக விடைக்குறிப்பிற்கு இணையவழியில் ஆட்சேபனை தெரிவிக்கும் போது உரிய வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்றி அதற்குரிய சான்றாவணங்களை இணைக்க வேண்டும். சான்றாவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

மேலும், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக்குறிப்பின் மீது தேர்வர்கள் ஆட்சேபனை தெரிவிக்க விரும்புவோர் இன்று முதல் 25-ம் தேதி மாலை 5.30 மணி வரையில் மட்டும் ஆதாரங்களுடன் பதிவு செய்திடல் வேண்டும் அங்கீகரிக்கப்பட்ட பாட புத்தகங்கள் ஆதாரம் மட்டுமே அளிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News