Join THAMIZHKADAL WhatsApp Groups
புற்றுநோய்க்கு ஏராளமான சிகிச்சைகள் வந்தாலும் புற்றுநோயின் தாக்கத்தை சரியான நேரத்தில் கண்டறியப் படாமல் போவதால் அதிக இறப்புகள் உண்டாகின்றன. வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் ஆகியவற்றின் மூலம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி புற்றுநோயை தடுக்கவும் தவிர்க்கவும் செய்ய முடியும்.புகைப்பிடிப்பதை தவிர்ப்பது, சன் ஸ்கிரீன் முறையாக அணிவது, ஊட்டச்சத்துக்கள் குறைபாடு உண்டாகாமல் பார்த்துக் கொள்வது, சப்ளிமெண்ட்டுகளை சரியாக எடுத்துக் கொள்வது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களும் ஆரோக்கியமான உணவு முறையும் புற்றுநோயை தடுக்க உதவி செய்யும்.
அதன்படி, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து, அதன் வீரியத்தையும் குறைத்து உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் இந்த ஜூஸ் பல நன்மைகளை கொண்டுள்ளது. இதனை தயாரிக்கும் முறை குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: தக்காளி 3, கேரட் 1, எலுமிச்சை பழம் 1, தேன் தேவையான அளவு, கொத்தமல்லி, தண்ணீர். செய்முறை: முதலில் கேரட்டை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும். இதையடுத்து, இதனுடன், நறுக்கிய தக்காளி, கொத்தமல்லி, தண்ணீர் சேர்த்து மிக்சி ஜாரில் போட்டு மை போல அரைத்துக்கொள்ளுங்கள்.பிறகு அதை நன்றாக வடிகட்டி, அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வரவும்.
இந்த ஹெல்தி ஜூஸை வாரம் 2 முறை குடித்து வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் இதன்மூலம் புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுத்து அதனை அழிக்க முடியும். இதில் இருக்கும் வைட்டமின், கரோடின், பாலி அசிட்டிலீன், ஃபால்கார்சினால், ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் கண்களின் ஆரோக்கியத்திற்கும் பயன்படுகிறது. தக்காளி மற்றும் கேரட்டில் இருக்கும் சத்துக்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தருகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் இந்த ஜூஸை, இரத்தம் அழுத்தம் உள்ளவர்களும் குடிக்கலாம் நல்ல தீர்வு கிடைக்கும்.
No comments:
Post a Comment