Join THAMIZHKADAL WhatsApp Groups
நம்மில் பலருக்கு வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். அது வேலைக்காகவும் இருக்கலாம் அல்லது சுற்றுலாவுக்காகவும் இருக்கலாம். ஆனால், ஆசை மட்டும் இருந்தால் போதுமா, அதற்கான அடித்தளத்தையும் போடா வேண்டும் அல்லவா. அப்படி, பாஸ்போர்ட் எடுக்க நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். ஆன்லைனில் பாஸ்போர்ட் எப்படி அப்ளை செய்வது என இங்கே பார்க்கலாம்.
நாம் திடீர் என வெளியூர்களுக்கு ரயிலில் பயணம் செய்ய தட்கல் டிக்கெட் பதிவு செய்வோம். அதே போல, திடீர் என நீங்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், தட்கல் பாஸ்போர்ட் எடுக்கலாம் என உங்களுக்கு தெரியுமா? வெளியுறவு அமைச்சகம் (MEA), அவசரமாக பாஸ்போர்ட் தேவைப்படுபவர்களுக்கு தட்கல் பாஸ்போர்ட்டை வழங்குகிறது.
தட்கல் கடவுச்சீட்டுத் திட்டம், வெளிநாடுகளுக்குச் அவசரமாக செல்ல வேண்டிய யார் வேண்டுமானாலும், உடனே பாஸ்போர்ட் பெற அனுமதிக்கிறது. தட்கல் பாஸ்போர்ட் அப்ளை செய்த மூன்றே நாளில் பாஸ்போர்ட் உங்கள் கைக்கு கிடைத்துவிடும். இதற்கு, பாஸ்போர்ட் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். இந்த முறையில், பாஸ்போர்ட் வழங்கப்பட்ட பின் போலீஸ் வெரிஃபிகேஷன் செய்யப்படும்.
தட்கல் பாஸ்போர்ட் அப்ளை செய்வதற்கான தகுதி என்ன?
18 வயதுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் தட்கல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். அத்துடன் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். ஆனால், பதிவு செய்த அனைவருக்கும் தட்கல் பாஸ்ப்போர்ட் கிடைக்கும் என உறுதியாக கூற முடியாது. உங்களது கோரிக்கையை பாஸ்போர்ட் அலுவலகம் ஏற்கலாம் அல்லது மறுக்கலாம்.
தட்கால் பாஸ்போர்ட் சேவைக்கு விண்ணப்பிக்கும் போது உங்களிடம் இருக்க வேண்டிய ஆவணங்கள் : வாக்காளர் அடையாள அட்டை / பணியாளர் புகைப்பட அடையாள அட்டை / SC / ST / OBC-யின் சான்றிதழ் / identity cards of freedom fighters / ரேஷன் கார்டு / சொத்து ஆவணங்கள் / ஓய்வூதியம் ஆகியவற்றிலிருந்து ஏதேனும் மூன்று ஆவணங்கள்.
தட்கல் பாஸ்போர்ட்டுக்கு எப்படி விண்ணப்பிப்பது?
தட்கல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான எளிய வழிமுறைகளை இங்கே சரிபார்க்கவும்.
படி 1: பாஸ்போர்ட் சேவாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று, உங்களை தகவலை பதிவு செய்யவும்.
படி 2: உள்நுழைய உங்கள் ID மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
படி 3: இப்போது, ஒரு மெனு தோன்றும் - அதில், fresh and re-issue of passport -யை பெருவகற்கான இணைப்பும் இருக்கும். எனவே, பொருத்தமான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 4: மெனுவில், தட்கல் பிளான் என்பதை தேர்வு செய்யவும்.
படி 5: இப்போது, விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யவும்.
படி 6: தேவையான ஆவணங்களுடன் நியமிக்கப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் அருகிலுள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திராவுக்கு (PSK) செல்லவும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தின் ரசீது மற்றும் பிற அடையாளச் சான்றுகளை இணைக்க நினைவில் கொள்ள வேண்டும்.
மூன்றே நாளில் பாஸ்போர்ட் வழங்கப்படும்
ஆன்லைனில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட மூன்றாவது நாளில் பாஸ்போர்ட் வீட்டிற்கு அனுப்பப்படும். மூன்று நாட்களுக்கு முன் கைக்கு கிடைக்காது. 3 நாட்களில் பாஸ்போர்ட்டைப் பெற, நீங்கள் பதிவேற்றிய அனைத்து ஆவணங்களும் சரியான மற்றும் உண்மையானதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே மூன்று நாளில் பாஸ்போர்ட் வழங்கப்படும். தட்கல் பாஸ்போர்டுக்கு விண்ணப்பிக்கும் போது, பாஸ்போர்ட் வழங்கப்பட்ட பின்னரே போலீஸ் சரிபார்ப்பு செய்யப்படும். இந்த விரைவான சேவைக்கு, கூடுதலாக ரூ. 2,000 செலுத்த வேண்டும்.
யார் எல்லாம் தட்கல் பாஸ்போர்ட் பெற முடியாது?
> இந்தியாவிற்கு வெளியே பிறந்த இந்திய குடிமக்கள்.
> இயற்கைமயமாக்கல் அல்லது பதிவு மூலம் குடியுரிமை அந்தஸ்தைப் பெற்ற இந்திய குடிமக்கள்.
> பிற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட விண்ணப்பதாரர்கள்.
> அரசாங்கத்தின் செலவில் சொந்த நாட்டிற்கு திரும்பிய விண்ணப்பதாரர்கள்.
> நாகாலாந்து மற்றும் ஜம்மு & காஷ்மீரில் வசிப்பவர்கள்.
> நாகாலாந்துக்கு வெளியே வாழும் நாகா வம்சாவளி குடிமக்கள்.
> இந்திய மற்றும் சர்வதேச பெற்றோரால் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள்.
> நாகாலாந்தில் வாழும் குழந்தைகள்.
> தொலைந்து போன அல்லது திருடப்பட்ட பாஸ்போர்ட் காரணமாக சமீபத்தில் பாஸ்போர்ட்டை புதுப்பித்த விண்ணப்பதாரர்கள்.
> விண்ணப்பதாரரின் கடவுச்சீட்டு சீர்செய்ய முடியாத வகையில் சேதமடைந்துள்ளதால்.
> பாலினம் அல்லது தோற்றத்தில் மாற்றங்கள்.
> கையொப்பம் போன்ற தனிப்பட்ட தகவல்களில் மாற்றங்கள்.
No comments:
Post a Comment